Sriharikota Rocket: ஏன்..? ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைத்துள்ளது..? சுவாரஸ்யமான அறிவியல் உண்மைகள்...
Sriharikota Rocket: இந்தியாவில் ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை அனுப்புவதற்கு முக்கியமான காரணம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். .
Sriharikota rocket
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய தொழில்நுட்பத்திற்காகவும், விண்வெளி ஆராய்ச்சிக்காகவும் பல கோடி ரூபாய் செலவு செய்து ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பி வருகிறார்கள். அந்த வகையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. வெளிநாட்டு செயற்கை கோள்களையும் வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை செய்து வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான 155 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஒ, நியூசர், 2.8 கிலோ எடை கொண்ட ஸ்கூப் -1 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாது ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவப்பட்டது.
Sriharikota rocket
இந்தியாவில் ஶ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட்டை அனுப்புவதற்கு முக்கியமான காரணம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். .
பூமி தன்னை த்தானே மிக அதிக வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அப்படி, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போது பூமியின் ஒரு பகுதியில் இருந்து ராக்கெட் அனுப்படும். ஏனெனில், அப்போது தான் பூமியின் சுழற்சியினால் அந்த ராக்கெட்டின் மேல் கூடுதல் அழுத்தம் விழும். இதனால் அந்த ராக்கெட்டுக்கு இன்னும் அதிக வேகம் கிடைக்கிறது. இதனால் நாம் எவ்வளவு வேகத்தில் அந்த ராக்கெட்டை அனுப்பினோமோ அதைவிட அதிக வேகத்தில் ராக்கெட் பயணம் செய்கிறது.
Sriharikota rocket
ராக்கெட்டை அதிக வேகத்தில் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவில் எரிபொருட்கள் தேவைப்படும். ராக்கெட்டின் மொத்த எடையில் 80 முதல் 90 சதவீதம் அதனுடைய எரிபொருள் எடையே இருக்கும்.உலகத்தில் எந்த இடத்தில் இருந்து ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறதோ அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் ராக்கெட்டுக்கு தேவைப்படும் எரிபொருளின் அளவும் குறையும்.
Sriharikota rocket
எனவே தான் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அனைத்து தங்கள் ராக்கெட் ஏவுதளத்தை ஈக்குவேட்டருக்கு அருகில் அமைத்துள்ளார்கள். ஈக்குவேட்டருக்கு பக்கத்தில் இருந்து ராக்கெட் அனுப்பினால் அந்த ரக்கெடிற்கு இந்த 159 கிலோமீட்டர் வேகம் கூடுதலாக எந்த விதமான எரிபொருள் செலவு இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது. இதனால், ராக்கெட்டிற்கு கிடைப்பதற்கு தேவைப்படும் எரிபொருள் அனைத்துமே மிச்சம் ஆகிறது.
Sriharikota rocket
ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பொழுது ஏதாவது அதில் பிரச்சனை ஏற்பட்டால் அந்த ராக்கெட் பூமியில் விழும். அப்போது மக்கள் பாதிப்படையாமல் இருக்க எந்த இடத்தில் இருந்து ராக்கெட் அனுப்பப்படுகிறதோ அந்த இடத்தின் கிழக்கு பக்கம் கடல் இருக்கும். அப்போது தான் ராக்கெட் கடலில் விழும்.