MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Google Storage காலி ஆகிடுச்சா? இனி காசு கொடுத்து வாங்காதீங்க.. இந்த ஒரு டிரிக் போதும்!

Google Storage காலி ஆகிடுச்சா? இனி காசு கொடுத்து வாங்காதீங்க.. இந்த ஒரு டிரிக் போதும்!

Google Storage: கூகுள் அக்கவுண்ட்டில் கிடைக்கும் 15GB ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா? என்ன செய்வதென்று தெரியவில்லையா? சில சிம்பிள் செட்டிங்ஸ் அல்லது ட்ரிக்ஸ் மூலம் ஸ்டோரேஜை ஈசியாக சரி செய்யலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 22 2026, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கூகுள் ஸ்டோரேஜ் பயன்பாடு
Image Credit : Getty

கூகுள் ஸ்டோரேஜ் பயன்பாடு

ஸ்மார்ட்போனில் போட்டோ, வீடியோ, டாக்குமென்ட்ஸ் என பலவற்றை சேமிக்கிறோம். Google Photos, Google Drive போன்ற கிளவுட் சேவைகளில் பேக்கப் எடுக்கிறோம். கூகுள் அக்கவுண்ட்டுடன் கிடைக்கும் 15GB இலவச ஸ்டோரேஜ் Gmail, Photos என அனைத்துக்கும் சேர்த்துதான். டூப்ளிகேட் போட்டோக்கள், தேவையில்லாத பேக்கப்களால் இது சீக்கிரம் நிரம்புகிறது. ஆனால், சில செட்டிங்ஸ் மாற்றினால் போதும், இடத்தை உறுதி செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Google அக்கவுண்ட்டில் 15GB இலவச ஸ்டோரேஜ்
Image Credit : @auroraonx/X

Google அக்கவுண்ட்டில் 15GB இலவச ஸ்டோரேஜ்

ஒவ்வொரு கூகுள் அக்கவுண்ட்டிற்கும் 15GB இலவச ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆனால், இந்த இடம் கூகுள் டிரைவிற்கு மட்டுமல்ல. Gmail, Google Photos மற்றும் பிற கூகுள் சேவைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. உங்கள் ஆண்ட்ராய்டு போனின் பேக்கப்பும் இந்த ஸ்டோரேஜைத்தான் பயன்படுத்தும். நீங்கள் தொடர்ந்து போட்டோ, வீடியோக்களை பேக்கப் எடுத்தால், 15GB ஸ்டோரேஜ் சில காலத்திலேயே நிரம்பிவிடும்.
37
ஒரே போட்டோ இரண்டு முறை பேக்கப் ஆகலாம்
Image Credit : our own

ஒரே போட்டோ இரண்டு முறை பேக்கப் ஆகலாம்

கூகுள் ஸ்டோரேஜ் சீக்கிரம் நிரம்புவதற்கு டூப்ளிகேட் பேக்கப் ஒரு முக்கிய காரணம். உதாரணமாக, உங்கள் வாட்ஸ்அப் டேட்டா கூகுள் டிரைவில் பேக்கப் ஆகும். அதே நேரத்தில், கூகுள் போட்டோஸ் உங்கள் போனில் உள்ள வாட்ஸ்அப் ஃபோல்டரில் இருக்கும் போட்டோ, வீடியோக்களைத் தனியாக பேக்கப் எடுக்கும். இதனால், ஒரே போட்டோ அல்லது வீடியோ இரண்டு இடங்களில் சேமிக்கப்பட்டு, ஸ்டோரேஜ் வேகமாக நிரம்புகிறது.
47
கூகுள் போட்டோஸில் ஃபோல்டர் பேக்கப்பை சரிபார்க்கவும்
Image Credit : Lava.com

கூகுள் போட்டோஸில் ஃபோல்டர் பேக்கப்பை சரிபார்க்கவும்

ஸ்டோரேஜை சேமிக்க, முதலில் கூகுள் போட்டோஸில் எந்தெந்த ஃபோல்டர்கள் பேக்கப் ஆகின்றன என்பதைச் சரிபார்க்கவும். வாட்ஸ்அப் அல்லது பிற மெசேஜிங் ஆப் மீடியா ஏற்கெனவே பேக்கப் ஆகிறதென்றால், கூகுள் போட்டோஸில் அந்த ஃபோல்டருக்கான பேக்கப்பை நீங்கள் ஆஃப் செய்யலாம். ஆனால், பேக்கப்பை நிறுத்துவதால், ஏற்கெனவே அப்லோட் ஆன ஃபைல்கள் தானாக டெலிட் ஆகாது. பழைய மற்றும் தேவையற்ற போட்டோ, வீடியோக்களை நீங்கள்தான் தேடி டெலிட் செய்ய வேண்டும்.
57
தேவையற்ற மீடியாவை நீக்கவும்
Image Credit : stockPhoto

தேவையற்ற மீடியாவை நீக்கவும்

வாட்ஸ்அப் குரூப்கள் மற்றும் சாட்களில் தினமும் ஏகப்பட்ட போட்டோக்கள், GIF-கள், மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் வருகின்றன. இவற்றில் பல ஃபைல்கள் நமக்குத் தேவையே இருக்காது. எனவே, முக்கியமான போட்டோ, வீடியோக்களை சேமித்துவிட்டு, தேவையற்ற மீடியாவை டெலிட் செய்யலாம். இது உங்கள் ஸ்டோரேஜை கணிசமாக மிச்சப்படுத்தும்.
67
ஆப் பேக்கப்பையும் சரிபார்க்கவும்
Image Credit : Gemini AI

ஆப் பேக்கப்பையும் சரிபார்க்கவும்

போட்டோ, வீடியோக்கள் மட்டுமல்ல, உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள சில ஆப்களின் டேட்டாவும் கூகுள் ஸ்டோரேஜில் பேக்கப் ஆகலாம். இதைச் சரிபார்க்க, உங்கள் போனில் Settings > Google > Backup பகுதிக்குச் சென்று, எந்தெந்த டேட்டா பேக்கப் செய்யப்படுகிறது என்பதைப் பாருங்கள்.
77
கூகுள் ஸ்டோரேஜை சரி செய்ய என்ன செய்யணும்?
Image Credit : Getty

கூகுள் ஸ்டோரேஜை சரி செய்ய என்ன செய்யணும்?

கூகுள் ஸ்டோரேஜ் நிரம்பினால், உடனடியாகக் கூடுதல் ஸ்டோரேஜ் பிளான் வாங்குவதற்கு முன் சில விஷயங்களைச் சரிபார்க்கவும். தேவையற்ற போட்டோ, வீடியோக்களை டெலிட் செய்யுங்கள். கூகுள் போட்டோஸில் தேவையில்லாத ஃபோல்டர் பேக்கப்பை நிறுத்துங்கள். டூப்ளிகேட் ஃபைல்களை நீக்குங்கள். ஆப் பேக்கப்பையும் ஒருமுறை செக் செய்யுங்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
கூகிள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி GPS தேவையில்லை? ISROவின் புதிய சாதனை.. செல்போன் முதல் ராணுவம் வரை கிடைக்கப்போகும் அதிரடி பலன்கள்
Recommended image2
இருளிலிருந்து உருவான பிரபஞ்சம்: 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட உண்மை!
Recommended image3
40 மணி நேரம் பேட்டரி, 1வருட இலவச சப்ஸ்கிரிப்ஷன்: அறிமுகமானது 'நாய்ஸ் பட்ஸ் ஆர்1 கானா எடிஷன்'!
Related Stories
Recommended image1
PhonePe, Google Pay பயனர்கள் காத்திருக்கும் அதிர்ச்சி? யுபிஐ கட்டணம் குறித்து வெளியான முக்கிய தகவல்
Recommended image2
Google Pixel Tag: பொருட்களை இனி தொலைக்கவே மாட்டீங்க.. ரூ.3,799 தான் விலை.. வசதிகள் பட்டையை கிளப்புது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved