MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PhonePe, Google Pay பயனர்கள் காத்திருக்கும் அதிர்ச்சி? யுபிஐ கட்டணம் குறித்து வெளியான முக்கிய தகவல்

PhonePe, Google Pay பயனர்கள் காத்திருக்கும் அதிர்ச்சி? யுபிஐ கட்டணம் குறித்து வெளியான முக்கிய தகவல்

UPI Charges: தேநீர் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இன்று யுபிஐ பணப் பரிவர்த்தனை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது கடினம். Google Pay, PhonePe, BHIM உள்ளிட்ட செயலிகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தினமும் டிஜிட்டல் கட்டணங்களை மேற்கொள்கிறார்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 22 2026, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
போன்பே, கூகுள் பே வாடிக்கையாளர்கள்
Image Credit : our own

போன்பே, கூகுள் பே வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் முகமாக மாறியுள்ள யுபிஐ முறையில் முக்கியமான மாற்றம் ஒன்று வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் வணிகர் கட்டணத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
யுபிஐ பரிவர்த்தனை
Image Credit : our own

யுபிஐ பரிவர்த்தனை

தற்போது பரிசீலனையில் உள்ள முன்மொழிவின்படி, பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய வணிகர்களிடம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே MDR விதிக்கப்படலாம். இந்த கட்டண விகிதம் 0.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த முன்மொழிவு குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு முடிவு எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Related image1
50MP சோனி கேமரா.. மொபைல் விலை இவ்வளவு தானா! உடனே வாங்கி போடுங்க!
Related image2
வாஷிங் மெஷினில் எத்தனை துணிகள் போட வேண்டும்? முழு லிஸ்ட் இதோ
34
யுபிஐ மூலம் பணம் அனுப்புதல்
Image Credit : google

யுபிஐ மூலம் பணம் அனுப்புதல்

இந்த மாற்றம் பொதுமக்களை நேரடியாக பாதிக்காது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, யுபிஐ மூலம் பணம் அனுப்பப்படும் தனிநபர்கள் அல்லது அன்றாட பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. மாறாக, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பெரிய வணிகர்களுக்கே இந்த வணிகக் கட்டணம் பொருந்தும் வகையில் திட்டமிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்கள்
Image Credit : our own

டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்கள்

இந்த மாற்றம் ஏன் பரிசீலிக்கப்படுகிறது என்ற கேள்விக்கும் காரணம் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளன. இந்த நேரடி பரிவர்த்தனைகளை தடையின்றி செயல்படுத்த வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தற்போது ரூ.2,000-க்கு குறைவான யுபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகளால், நீண்ட கால நிதி நிலைத்தன்மைக்காக புதிய வருவாய் முறை அவசியமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஃபோன்பே
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
UPI பரிவர்த்தனைகள்
UPI கொடுப்பனவு
வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.! உடனே அப்ளை பண்ணுங்க.!
Recommended image2
Train Ticket Discount: ரயில் பயணிகளுக்கு ரியல் ஜாக்பாட் அறிவிப்பு: டிக்கெட் கட்டணத்தில் 3% தள்ளுபடி!
Recommended image3
PM Kisan: பிஎம் கிசான் பணம் உயருமா? ரூ.2000 வரணும்னா இந்த 3 வேலையை உடனே முடிங்க!
Related Stories
Recommended image1
50MP சோனி கேமரா.. மொபைல் விலை இவ்வளவு தானா! உடனே வாங்கி போடுங்க!
Recommended image2
வாஷிங் மெஷினில் எத்தனை துணிகள் போட வேண்டும்? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved