MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • AC Buying Guide: பில்லையும் குறைக்கலாம்... குளுகுளுன்னு இருக்கலாம்.. சரியான ஏசியை தேர்வு செய்ய டிப்ஸ்!

AC Buying Guide: பில்லையும் குறைக்கலாம்... குளுகுளுன்னு இருக்கலாம்.. சரியான ஏசியை தேர்வு செய்ய டிப்ஸ்!

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க எப்போடா ஏசி வாங்கலாம்னு தோணும். ஆனா கடைக்குப் போனா, நூத்துக்கணக்கான மாடல்கள், விதவிதமான ஃபீச்சர்கள்னு நம்மளையே குழப்பிடும். சரியான ஏசியை எப்படி தேர்ந்தெடுப்பது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 30 2026, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சரியான ஏசியை வாங்குவது எப்படி?
Image Credit : Pinterest

சரியான ஏசியை வாங்குவது எப்படி?

நிறைய பேர் கடைல சேல்ஸ்மேன் சொல்றதையோ இல்லையெனில் பார்க்க நல்லா இருக்குற ஏசியையோ வாங்கிடுவாங்க. ஆனா, உங்க ரூம் சைஸ்தான் ஏசியோட பெர்ஃபாமன்ஸை முடிவு பண்ணும். உதாரணமா, உங்க ரூம் 100-லிருந்து 120 சதுர அடிக்குள்ள இருந்தா 1 டன் ஏசி போதும். அதுவே 150 சதுர அடி வரைக்கும் இருந்தா, கட்டாயம் 1.5 டன் ஏசிதான் வாங்கணும். ரூமுக்கு சம்பந்தம் இல்லாத கம்மி டன் ஏசி போட்டா, ரூமை கூல் பண்ண அது நாள் முழுக்க ஓடிட்டே இருக்கும். இதனால கரண்ட் பில் எகிறிடும். அதனால, ஏசி வாங்குறதுக்கு முன்னாடி உங்க ரூம் அளவை சரியா தெரிஞ்சுக்கோங்க.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
இன்வெர்ட்டர் ஏசிதான் பெஸ்ட் சாய்ஸ்
Image Credit : Amazon.com

இன்வெர்ட்டர் ஏசிதான் பெஸ்ட் சாய்ஸ்

இன்வெர்ட்டர் ஏசினா கரண்ட் போனதும் இன்வெர்ட்டர்ல ஓடும்னு பலரும் தப்பா நினைக்கிறாங்க. அது உண்மையில்லை. இன்வெர்ட்டர் டெக்னாலஜி, ஏசியோட கம்ப்ரசர் வேகத்தை தேவைக்கு ஏத்த மாதிரி கட்டுப்படுத்தும். பழைய நான்-இன்வெர்ட்டர் ஏசி, ரூம் கூல் ஆனதும் கம்ப்ரசரை ஆஃப் பண்ணிடும், சூடானதும் ஆன் பண்ணும். இப்படி ஆன்-ஆஃப் ஆகுறதால கரண்ட் அதிகமா செலவாகும். ஆனா இன்வெர்ட்டர் ஏசி, ரூம் கூல் ஆனதும் கம்ப்ரசர் வேகத்தை குறைச்சு மெதுவா ஓடும். இதனால 30-40% வரை கரண்ட் பில் மிச்சமாகும். ஒரு நாளைக்கு 6-8 மணி நேரத்துக்கு மேல ஏசி யூஸ் பண்றீங்கன்னா, இன்வெர்ட்டர் ஏசிதான் பெஸ்ட் சாய்ஸ்.

Related Articles

Related image1
Now Playing
Car AC | கார் ஏசி கூலிங் பத்தலையா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க ! சில்லுன்னு இருக்கும் !
Related image2
பட்ஜெட் விலையில் ஏசி வாங்கணுமா? இதோ ரூ.20,000 - 40,000 விலையில் கிடைக்கும் சூப்பர் மாடல்கள்!
35
5 ஸ்டார் ஏசி வாங்குறதுதான் புத்திசாலித்தனம்
Image Credit : Amazon.com

5 ஸ்டார் ஏசி வாங்குறதுதான் புத்திசாலித்தனம்

ஏசி மேல இருக்குற ஸ்டார் ஸ்டிக்கர் வெறும் டிசைனுக்கு இல்லை. அது உங்க ஏசி எவ்வளவு திறமையா வேலை செய்யுதுன்னு காட்டுறதுக்கு. 1 ஸ்டார் ஏசி விலை கம்மியா இருக்கலாம், ஆனா கரண்ட் பில்லை எகிற வைக்கும். 5 ஸ்டார் ஏசி விலை கொஞ்சம் அதிகம்னாலும், கரண்ட் செலவு ரொம்ப கம்மி. நீங்க அதிகமா ஏசி பயன்படுத்துற ஆள்னா 5 ஸ்டார் ஏசி வாங்குறதுதான் புத்திசாலித்தனம். எப்பவாச்சும் கெஸ்ட் வந்தா மட்டும் யூஸ் பண்ணுவீங்கன்னா 3 ஸ்டார் ஏசி போதும். இந்த ஸ்டார் ரேட்டிங்கை BEE (Bureau of Energy Efficiency) அமைப்பு ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை மாத்தும். அதனால, லேட்டஸ்ட் 2026 ரேட்டிங் பார்த்து வாங்குங்க.
45
 ஏசியோட ஆயுளை கூட்டும்
Image Credit : Pixabay

ஏசியோட ஆயுளை கூட்டும்

ஏசியோட கண்டென்சர் காயில்தான் அதன் இதயமே. மார்க்கெட்ல அலுமினியம், காப்பர்னு ரெண்டு வகை காயில் ஏசி இருக்கு. அலுமினியம் காயில் விலை மலிவு, ஆனா சீக்கிரம் துரு பிடிச்சு, கேஸ் லீக் பிரச்சினை வரும். ஆனா காப்பர் காயில் சீக்கிரம் துரு பிடிக்காது, வெப்பத்தையும் வேகமா வெளியேற்றும். ஒருவேளை லீக் ஆனாலும் காப்பர் காயிலை சுலபமா சரிபண்ணிடலாம். அலுமினியம்னா மொத்தமா மாத்தணும். அதனால வாங்கும்போதே அது '100% காப்பர்' காயிலானு செக் பண்ணி வாங்குங்க. இது உங்க ஏசியோட ஆயுளை கூட்டும்.
55
கம்பெனியோட சர்வீஸ் எப்படி ?
Image Credit : Pixabay

கம்பெனியோட சர்வீஸ் எப்படி ?

ஏசி வாங்கும்போது விலையை மட்டும் பார்க்காம, அந்த கம்பெனியோட சர்வீஸ் எப்படி இருக்குன்னும் பார்க்கணும். ஏசிக்கு ரெகுலர் சர்வீஸ் ரொம்ப முக்கியம். வெயில் காலத்துல ஏசி ரிப்பேர் ஆனா, சர்வீஸ் சென்டர்ல இருந்து உடனே வரலைனா ரொம்ப கஷ்டம். அதனால உங்க ஏரியாவுல எந்த பிராண்டுக்கு நல்ல சர்வீஸ் இருக்குனு விசாரிச்சு வாங்குங்க. இப்போ வர்ற பல ஏசிக்கள்ல வைஃபை, ஸ்மார்ட் ஃபீச்சர்கள் இருக்கு. இதனால போன் மூலமாவே ஏசியை ஆன்-ஆஃப் பண்ணலாம். இந்த மாதிரி ஃபீச்சர்கள் நம்ம லைஃப்ஸ்டைலை இன்னும் ஈஸியாக்கும். முக்கியமா, ஏசி ஃபில்டரை நாமளே சுத்தம் செய்ய கத்துக்கிட்டா, காசும் மிச்சம், சுத்தமான காற்றும் கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஏசி பராமரிப்பு குறிப்புகள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
50x Zoom: 50x ஜூம், 16GB ரேம்.. கேமரா கிங் வருது.. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ பட்டையை கிளப்புது
Recommended image2
Google Pixel 10 Price Cut: ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் தள்ளுபடி.. கூகுள் பிக்சல் 10 விலை அதிரடி குறைப்பு.. உடனே ஆர்டர் போடுங்க!!
Recommended image3
Turn air cooler into AC: கூலர் டேங்கில் இதை தூவுங்க.. நாள் முழுக்க ஜில் ஜில் காற்று தான்..
Related Stories
Recommended image1
Now Playing
Car AC | கார் ஏசி கூலிங் பத்தலையா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க ! சில்லுன்னு இருக்கும் !
Recommended image2
பட்ஜெட் விலையில் ஏசி வாங்கணுமா? இதோ ரூ.20,000 - 40,000 விலையில் கிடைக்கும் சூப்பர் மாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved