- Home
- டெக்னாலஜி
- பட்ஜெட் விலையில் ஏசி வாங்கணுமா? இதோ ரூ.20,000 - 40,000 விலையில் கிடைக்கும் சூப்பர் மாடல்கள்!
பட்ஜெட் விலையில் ஏசி வாங்கணுமா? இதோ ரூ.20,000 - 40,000 விலையில் கிடைக்கும் சூப்பர் மாடல்கள்!
கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. இந்த வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் ஏசி வாங்க திட்டமிடுகின்றனர். ரூ.20,000 - 40,000 விலையில் கிடைக்கும் ஏசி மாடல்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
15

Image Credit : Pinterest
ஏசி வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
ஏசியை பயன்படுத்த ஆரம்பிக்கும் முன், கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும். முக்கியமாக, கேஸ் லீக் இருக்கிறதா என்று சரிபார்த்தால் கூலிங் நன்றாக இருக்கும். இன்டோர், அவுட்டோர் யூனிட்களை சுத்தம் செய்வது மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும். சரியான சர்வீஸ், ஏசியின் ஆயுளை அதிகரித்து, நமக்கு நல்ல காற்றையும் தரும்.
Add Asianetnews Tamil as a Preferred Source

25
Image Credit : Amazon.com
ஸ்டார் ரேட்டிங் வித்தியாசங்கள்:
3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசிகளுக்கு இடையே மின் கட்டணத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பயன்படுத்தும் நடுத்தர குடும்பங்களுக்கு 3 ஸ்டார் ஏசியே சரியான தேர்வாக இருக்கும். ஏசி வாங்கும்போது விலையை மட்டும் பார்க்காமல், கம்ப்ரெசர் வாரண்டி மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை எப்படி இருக்கிறது என்றும் விசாரிக்க வேண்டும்.
35
Image Credit : Amazon.com
Samsung, Panasonic ஏசிகள்
Samsung, Panasonic பிராண்டுகள் நீண்ட காலம் உழைக்கக்கூடியவை. இவற்றில் 1.5 டன் திறன் கொண்ட ஏசிகள் 35,000 முதல் 40,000 ரூபாய் வரை கிடைக்கின்றன. வைஃபை வசதி இருப்பதால், அலுவலகத்தில் இருந்து வரும்போதே ஏசியை ஆன் செய்யலாம். Panasonic-ல் உள்ள 'டஸ்ட் பஸ்டர்' டெக்னாலஜி, காற்றில் உள்ள மிக நுண்ணிய தூசிகளைக் கூட வடிகட்டுகிறது. இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.
45
Image Credit : Pixabay
ஸ்டெபிலைசர் மற்றும் இன்ஸ்டாலேஷன்
ஏசி வாங்கும்போது, இன்ஸ்டாலேஷன் கட்டணம் மற்றும் ஸ்டெபிலைசர் செலவுகளையும் பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக, இன்ஸ்டாலேஷனுக்கு 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவாகும். வோல்டேஜ் ஏற்ற இறக்கத்தில் இருந்து ஏசியை பாதுகாக்க, 2,000 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்டெபிலைசர் வாங்குவது அவசியம். இது இடி, மின்னல் நேரங்களில் ஏசியை பாதுகாக்கும்.
55
Image Credit : Pixabay
பட்ஜெட்டுக்கு ஏற்ற டீல்கள்
MarQ போன்ற பிராண்டுகள் 20,000 ரூபாய்க்கே ஏசிகளை வழங்குகின்றன. பட்ஜெட் குறைவாக இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல ஆப்ஷன். ஆனால், ஒரு நல்ல பிராண்ட் வேண்டுமென்றால் 30,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வது நல்லது. சம்மர் ஆஃபர்களில் வங்கி தள்ளுபடிகளைப் பயன்படுத்தினால், விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. ஏசியை எப்போதுமே ஒரு நீண்ட கால முதலீடாகக் கருதி, நல்ல தரமான மாடலைத் தேர்ந்தெடுங்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
Latest Videos

