MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Natural Cooling: ஏசி, ஏர்கூலர் தேவை இல்ல.! கொளுத்தும் வெயில்ல வீட்டை ஜில்லுனு மாத்த 7 சிம்பிள் வழிகள்.!

Natural Cooling: ஏசி, ஏர்கூலர் தேவை இல்ல.! கொளுத்தும் வெயில்ல வீட்டை ஜில்லுனு மாத்த 7 சிம்பிள் வழிகள்.!

How to cool room without AC Natural Cooling Tips : ஏசி, ஃபேன் இல்லாமல் வீட்டை இயற்கையாக குளிர்ச்சியாக வைப்பதற்கான 7 எளிய வழிகள். கரண்ட் பில்லை மிச்சப்படுத்தி, கோடையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ் இதோ.

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 26 2026, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
How to cool room without AC Natural Cooling Tips
Image Credit : Asianet News

How to cool room without AC Natural Cooling Tips

இந்தியாவில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகுது. ஏசி-யை மட்டுமே நம்பினா கரண்ட் பில் எகிறும், காத்தும் வறண்டு போகும். ஆனா, நம்ம முன்னோர்கள் பல நூற்றாண்டுகளா சிறப்பான கட்டிடக்கலை, இயற்கையான காற்றோட்டத்தை வெச்சுதான் வீட்டை கூலா வெச்சிருந்தாங்க. ஜன்னல், ஸ்க்ரீன்னு சின்ன சின்ன மாற்றம் செஞ்சாலே, வீட்டு வெப்பநிலையை குறைக்கலாம். அதுக்கான ஏழு வழிகளைப் பார்க்கலாம்.

27
மாலையில் ஜன்னலை திறந்து வையுங்கள்
Image Credit : Getty

மாலையில் ஜன்னலை திறந்து வையுங்கள்

வீட்டை கூலா வெச்சுக்க, ஜன்னலை எப்போ திறக்கணும், எப்போ மூடணும்னு ஒரு கணக்கு இருக்கு. பகல் நேரத்துல வெளிய இருக்குற அனல் காத்து உள்ள வராம இருக்க ஜன்னல், கதவை இறுக்கமா மூடிடுங்க. சூரியன் மறைஞ்சதும், வெளிய இருக்கிற வெப்பநிலை வீட்டுக்குள்ள இருக்கிறதை விட குறையும். அப்போ, வீட்டின் எதிர் எதிர் திசையில் உள்ள ஜன்னல்களைத் திறங்க. இது உள்ளே இருக்கும் சூடான காத்தை வெளியேற்றி, ஜில்லுனு காத்து உள்ள வர வழிவகுக்கும்.

Related Articles

Related image1
ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!
Related image2
Old Jeans Reuse : பழைய ஜீன்ஸை தூக்கிப் போடாதீங்க.! இந்த 7 வீட்டு உபயோகப் பொருட்களை செஞ்சு ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்துங்க.!
37
வெட்டிவேர் அல்லது சணல் திரைகளை பயன்படுத்துங்கள்
Image Credit : AI Generated

வெட்டிவேர் அல்லது சணல் திரைகளை பயன்படுத்துங்கள்

கனமான கருப்பு நிற ஸ்க்ரீன்களை விட, நம்ம ஊர்ல பயன்படுத்துற மாதிரி வெட்டிவேர் அல்லது சணல் தட்டிகளைப் பயன்படுத்துவது சூப்பர். மதியானம் நேரத்துல இந்த ஸ்க்ரீன்கள் மேல கொஞ்சம் தண்ணி தெளிச்சு விடுங்க. வெளியில இருந்து வர்ற அனல் காத்து, இந்த ஈரமான தட்டி வழியா வரும்போது, நீர் ஆவியாகி வீட்டுக்குள்ள ஜில்லுனு காத்து வரும். இது ஒரு நேச்சுரல் கூலர் மாதிரி வேலை செய்யும், நல்ல வாசனையையும் கொடுக்கும்.

47
வீட்டை அடிக்கடி ஈரத்துணியால் துடையுங்கள்
Image Credit : chat gpt

வீட்டை அடிக்கடி ஈரத்துணியால் துடையுங்கள்

இந்தியாவில் பல வீடுகளில் மார்பிள் அல்லது கல் தரைகள் இருக்கும். இது சூட்டை அதிக நேரம் பிடித்து வைக்கும். மதிய நேரத்தில், இரண்டு-மூன்று முறை ஜில்லுனு தண்ணியால தரையைத் துடைப்பது ரொம்ப நல்லது. தரையில் உள்ள நீர் ஆவியாகும்போது, அறையில் உள்ள சூட்டை அது உறிஞ்சிவிடும். இந்த செயலால், வீட்டுக்குள் இருக்கும் காற்று லேசாகவும், இதமாகவும் மாறும்.

57
வீட்டை குளிர்ச்சியாக்கும் சில செடிகள்
Image Credit : Gemini AI

வீட்டை குளிர்ச்சியாக்கும் சில செடிகள்

பாம்புச் செடி (Snake Plant), மணி பிளான்ட், கற்றாழை போன்ற செடிகளை ஜன்னல் பக்கத்துல வைங்க. இந்த செடிகள் 'டிரான்ஸ்பிரேஷன்' (Transpiration) முறையில காற்றில் ஈரப்பதத்தை வெளியிடும். இது சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். பால்கனியில் உயரமான செடிகளை வளர்த்தால், அது சூரிய ஒளி நேரடியாக சுவரில் படுவதைத் தடுத்து, வீட்டைக் காக்கும்.

67
எலக்ட்ரானிக் சாதன பயன்பாடு
Image Credit : Asianet News

எலக்ட்ரானிக் சாதன பயன்பாடு

பழைய குண்டு பல்பு, டியூப்லைட் எல்லாம் ஒரு சின்ன ஹீட்டர் மாதிரி செயல்பட்டு, அறையில் சூட்டை உண்டாக்கும். கம்ப்யூட்டர், டிவி, சார்ஜர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் ஆன்-ல இருக்கும்போது வெப்பத்தை உருவாக்கும். அதனால், சூட்டை வெளியிடாத LED பல்புகளைப் பயன்படுத்துங்க. தேவை இல்லாதப்போ எலக்ட்ரானிக் கருவிகளை அன்-பிளக் செஞ்சுடுங்க. இது வீட்டுக்குள்ள சூடு ஏறுவதைத் தடுக்கும்.

77
ஃபேன் முன்பு ஐஸ்கட்டிகள்
Image Credit : AI Generated

ஃபேன் முன்பு ஐஸ்கட்டிகள்

ஃபேன் காத்தை சுழல வைக்குமே தவிர, குளிர்விக்காது. ஆனா, ஃபேன் காத்தை ஏசி மாதிரி ஜில்லுனு ஆக்க ஒரு வழி இருக்கு. ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, ஃபேனுக்கு முன்னாடி வைங்க. ஃபேன் காத்து அந்த ஐஸ் மீது படும்போது, குளிர்ந்த நீர்த்திவலைகளை அறை முழுவதும் பரப்பும். உங்க சீலிங் ஃபேன் 'கவுண்டர்-கிளாக்வைஸ்' (Counter-clockwise) திசையில் சுத்துதான்னு பாத்துக்கோங்க. அப்போதான் காத்து நேரடியா கீழ்நோக்கி வரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
கோடைக்காலம்
கோடைக்கால குறிப்புகள்
காற்று குளிர்விப்பான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Carrot Farming: உங்க ஊர்லயே லட்சங்களில் சம்பாதிக்கலாம்..! கேரட் விவசாயம் தரும் சூப்பர் வருமானம்..
Recommended image2
ராத்திரி நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? டாக்டர்கள் சொல்லும் அட்வைஸ்
Recommended image3
Roof Cooling: ஏசி, கூலர் இல்லாமல் வீட்டை கூல் ஆக்கலாம்! இந்த மேஜிக் பெயிண்ட் அடிச்சு பாருங்க‌!
Related Stories
Recommended image1
ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!
Recommended image2
Old Jeans Reuse : பழைய ஜீன்ஸை தூக்கிப் போடாதீங்க.! இந்த 7 வீட்டு உபயோகப் பொருட்களை செஞ்சு ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்துங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved