அதள பாதாளத்தில் விழுந்த அரட்டை செயலி.. கூகுள் ப்ளே ஸ்டோர் தரவரிசையில் பின்னடைவு
வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக ஜோஹோ அறிமுகப்படுத்திய 'அரட்டை' செயலி, ஆரம்பத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், தற்போது அதன் புகழ் குறைந்து ப்ளே ஸ்டோர் தரவரிசையில் பின்தங்கியுள்ளது.

அரட்டை ஆப் ரேங்கிங்
வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக இந்திய டெக் நிறுவனமான ஜோஹோ கொண்டு வந்த 'அரட்டை' செயலியின் புகழ் மங்கி வருகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் டாப் 100 செயலிகள் பட்டியலில் இருந்து இது வெளியேறியுள்ளது. 2021-ல் தொடங்கப்பட்ட இந்த செயலி, 'ஆத்மநிர்பர் பாரத்' பிரச்சாரத்தால் பிரபலமடைந்தது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு கோடி பதிவிறக்கங்களைக் கடந்து, 4.8 ரேட்டிங்குடன் முதலிடத்தைப் பிடித்தது.
கூகுள் ப்ளே தரவரிசை
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளுடன் போட்டியிடுவது கடினம். ஆனால், 'அரட்டை' ஒரு நீண்ட கால பார்வையுடன் கொண்டுவரப்பட்டதாக ஜோஹோ நிறுவனம் கூறுகிறது. உடனடி வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் 'அரட்டை' செயலியை முதன்மை மெசேஜிங் செயலியாக மாற்றுவதே தங்களின் நீண்ட கால நோக்கம் என சோஹோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அரட்டை ஆப்
இதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 'அரட்டை' என்பது ஒரு தமிழ் வார்த்தை, இதன் பொருள் 'பேச்சு' அல்லது ‘உரையாடல்’ ஆகும். பல மத்திய அமைச்சர்கள் இந்த செயலியைப் பயன்படுத்த ஊக்குவித்தனர்.