MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • திடீரென முடங்கிய கூகுள் மீட்.. இந்திய பயனர்கள் அதிகம் பாதிப்பு.. எப்போது சரியாகும்?

திடீரென முடங்கிய கூகுள் மீட்.. இந்திய பயனர்கள் அதிகம் பாதிப்பு.. எப்போது சரியாகும்?

இன்று காலை கூகுள் மீட் சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால், டெஸ்க்டாப் பயனர்கள் ஆன்லைன் மீட்டிங்கில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சனைக்கு Cloudflare கோளாறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

1 Min read
Raghupati R
Published : Nov 26 2025, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
கூகுள் மீட் முடங்கியது
Image Credit : Google

கூகுள் மீட் முடங்கியது

இன்றைய காலை முதலே பலரும் தங்கள் ஆன்லைன் மீட்டிங்கில் சேர முடியாமல் சிக்கலில் சிக்கினர். இதற்கு முக்கிய காரணம் கூகுள் மீட்டில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு ஆகும். குறிப்பாக டெஸ்க்டாப் மூலம் இணைய பயனர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருந்தது. Downdetector தரவுகளின்படி, காலை 11:30 (IST) முதல் புகார்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. ஆரம்பத்தில் 1,000 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரியவர, சில நிமிடங்களில் அந்த எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியது. எங்களும் சோதனை செய்தபோது, ​​desktop version-ல் இணைவதில் சிக்கல் இருந்தபோதும், மொபைல் ஆப்பில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மீட்டிங்கில் சேர முடிந்தது.

22
என்ன பிரச்சனை? Cloudflare கோளாறா காரணம்?
Image Credit : Google

என்ன பிரச்சனை? Cloudflare கோளாறா காரணம்?

கூகுள் மீட்-ல் பிரச்சனை ஏற்பட்டதன் பின்னணி குறித்து ஆய்வு செய்யும் போது, ​​desktop version meeting join page-ல் மட்டுமே பயனர்கள் “தடுக்கப்பட்ட” அல்லது “மீண்டும் முயற்சி” செய்தி காணப்படுவதாக தெரியவந்துள்ளது. Downdetector தகவல்படி 64% பயனர்களின் இணையதள பிரச்சனை, 34% சர்வர் பிரச்சனையை புகாரளித்துள்ளனர். கடந்த வாரம் Cloudflare சேவையில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக AWS, Oracle, Google உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சேவை தடங்கலை சந்தித்துள்ளன. காரணம் உலகம் முழுவதும் பயன்படும் பெரும் cloud infrastructure ஆகும். சிறிய கட்டமைப்பு பிழை, மென்பொருள் புதுப்பிப்பு பிரச்சனை, அல்லது போக்குவரத்து அதிகரிப்பு போன்ற ஒன்றே உலகளாவிய சர்வர்களைக் குறைக்க முடியும். பொறியாளர்கள் இந்த கோளாறுகளை சரிசெய்ய non-stop firefighting செய்து வருகின்றனர்.

Related Articles

Related image1
பழைய புகைப்படங்களை HD-யாக மாற்றும் கூகுளின் புதிய Nano Banana Pro - மாற்றுவது எப்படி?
Related image2
டெல்லி செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைய தடை.. வெளியான அறிவிப்பு.. முழு விபரம்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூகிள்
தொழில்நுட்பம்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய புகைப்படங்களை HD-யாக மாற்றும் கூகுளின் புதிய Nano Banana Pro - மாற்றுவது எப்படி?
Recommended image2
ஐபோன் 16 விலை பாதியாக குறைந்தது.. Black Friday-யில் ரூ.40,000 க்குள் வாங்கலாம்.. எப்படி?
Recommended image3
ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரி! 5000mAh+ திறன்.. 2026ல் வெளியாகும் iPhone Fold.. நீங்கள் வாங்க தயாரா?
Related Stories
Recommended image1
பழைய புகைப்படங்களை HD-யாக மாற்றும் கூகுளின் புதிய Nano Banana Pro - மாற்றுவது எப்படி?
Recommended image2
டெல்லி செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைய தடை.. வெளியான அறிவிப்பு.. முழு விபரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved