டிசம்பர் 5 முதல் 14 வரை பொதுமக்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது. டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அறிவித்துள்ளது.
டெல்லியின் பிரபலமான வரலாற்று சின்னமான செங்கோட்டை பொதுமக்களுக்கு டிசம்பர் 5 முதல் 14 வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும். இந்த 10 நாள் மூடலுக்கான காரணம், யுனெஸ்கோவின் 20வது அமர்வு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான உத்தரவு, இந்திய தொல்பொருள் ஆய்வு துறை (ஏஎஸ்ஐ) இயக்குனர் ஜெனரல் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
யுனெஸ்கோ அமர்வு
இந்தியா, “பாதுகாத்தல் அருவமான கலாச்சார பாரம்பரியத்தை” எனும் யுனெஸ்கோவின் மிக முக்கியமான அமர்வை முதன்முறையாக நடத்துகிறது. டிசம்பர் 8 முதல் 13 வரை நடைபெறும் இந்த உயர்மட்ட அரசு அமர்வில், 24-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 1,000-க்கும் அதிகமானோர் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். உலக நாடுகளின் பண்பாட்டு மரபுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து இவ்வரு அமர்வு நடைபெறும்.

தற்காலிகமாக மூடப்படுகிறது
ASI வெளியிட்ட உத்தரவில், டிசம்பர் 8 முதல் 13 வரை செங்கோட்டையின் உள்ளே யுனெஸ்கோவின் “அரசுகளுக்கிடையேயான குழு” அமர்வு நடைபெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயர்நிலை சர்வதேச மாநாட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், அமைப்புகள், விருந்தினர் ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் நடைபெறுவதால், டிசம்பர் 5 முதல் 14 வரை பொதுமக்களுக்கு நுழைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 15 முதல் திறக்கப்படும்
செங்கோட்டை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என்பதால், இந்த அமர்விற்கு சிறப்பு பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் அவசியமாகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் கோட்டைக்கு செல்ல முடியாது. ஆனால் கவலைப்பட வேண்டாம். டிசம்பர் 15-ஆம் தேதி முதல் செங்கோட்டை மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.


