ஜியோ ஹாட்ஸ்டார் இவர்களுக்கெல்லாம் இலவசம்! ஜாலியாக ஐபிஎல் பார்க்கலாம்! முழு விவரம்!
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சில குறிப்பிட்ட பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் இவர்களுக்கெல்லாம் இலவசம்! ஜாலியாக ஐபிஎல் பார்க்கலாம்! முழு விவரம்!
இந்தியாவில் ஜியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளங்கள் தனியாக இயங்கி வந்த நிலையில், இப்போது இவை இரண்டும் இணைக்கப்பட்டு ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஓடிடி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்களுக்கு ஒரே ஓடிடி தளம் மூலம் அனைத்து சேவைகளும் கிடைக்க உள்ளன. ஆனால் இந்த இணைப்பின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிடி அளிக்கும் செய்தி ஒன்று வெளியானது.
அதாவது இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்த்து வந்த நிலையில், இனிமேல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது என்றும் ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளே நுழைய தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியனது. இது தொடர்பாக ஜியோ கட்டண விவரங்களையும் அறிவித்தன. அதாவது விளம்பரங்கள் உடன் என்றால் 149 ரூபாய் முதலும், விளம்பரங்கள் தேவையில்லை என்றால் ரூ.299 முதலும் பிளான்கள் உள்ளன.
ஜியோ ஹாட்ஸ்டார்
இந்நிலையில், சில குறிப்பிட்ட பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரை இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை ஏற்கெனவே வைத்திருந்தால் ஜியோ ஹாட்ஸ்டார் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். ஆனால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா எவ்வளவு நாள் இருக்கிறதோ, அவ்வளவு நாள் தான் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். உதாரணத்துக்கு நீங்கள் 3 மாத சந்தா வைத்திருந்தால் அந்த 3 மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரை இலவசமாக பார்க்கலாம்.
27 லட்சம் சிம் கார்டுகளை முடக்கும் அரசு! ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?
ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா
இதேபோல் ஜியோசினிமாவை சந்தாவை ஏற்கெனவே பெற்றிருந்தாலும் நீங்கள் ஜியோ ஹாட்ஸ்டாரை இலவசமாக பெற முடியும். ஜியோ சினிமாஸில் எத்தனை நாள் வேலிடிட்டி இருக்கிறதோ அத்தனை நாட்கள் ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக பயன்படுத்தலாம். மேலும் உங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா இருக்கிறதா? இல்லையா? என்பதை ஈஸியாக பார்க்கலாம்.
முதலில் உங்களின் மொபைல் எண் அல்லது இ மெயில் ஐடி கொடுத்து ஜியோ ஹாட்ஸ்டாரை ஓப்பன் செய்ய வேண்டும். பிறகு ப்ரோபைலில் சென்று செக் செய்து பார்த்தால் நீங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாதாரராக இருக்கிறீர்களா? இல்லையா? என்பது தெரிந்து விடும். உங்களிடம் சந்தா இருந்தால் அது எந்த வகை சந்தா? எத்தனை நாள் வேலிடிட்டி இருக்கிறது? என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் முழுமையாக தெரியவரும்.
ஜியோ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ்
இது தவிர முக்கியமாக, ஜியோசினிமா சந்தா வைத்துள்ளவர்கள் சிலர் ஆட்டோபே வசதியை ஆன் செய்து வைத்திருப்பார்கள். இந்த வசதியின்மூலம் நமது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மாதா மாதம் பணம் எடுக்கப்பட்டு சந்தா நீட்டித்துக் கொண்டே இருக்கும். இந்நிலையில், ஜியோசினிமாவில் இந்த ஆட்டோ பே வசதி ரத்து செய்யப்படுகிறது. இதனால் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு இனிமேல் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
Amazon Discount: ஒன்பிளஸ் நோர்ட் 4 போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி! அதிரடி விலை குறைப்பு!