27 லட்சம் சிம் கார்டுகளை முடக்கும் அரசு! ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?
27 லட்சம் சிம் கார்டுகளை அரசு அதிரடியாக முடக்க உள்ளது. இந்த சிம் கார்டுகள் ஏன் முடக்கப்பட உள்ளன? ஒருவர் எத்தனை சிம்கள் வைத்திருக்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.

27 லட்சம் சிம் கார்டுகளை முடக்கும் அரசு! ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?
இந்தியாவில் அண்மை காலங்களில் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்துள்ளன. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் மோசடியை தடுத்து நிறுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இப்போது பீகார் அரசு இந்த விஷயத்தில் ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது அங்கு 27 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் முடக்கப்பட உள்ளன.
பீகாரில் 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருப்பவர்களின் கார்டுகளை முடக்க தொலைத்தொடர்பு அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 27 லட்சம் பேர் 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்கள் தொலைத்தொடர்புத் துறையால் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட உள்ளன. 9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு இப்போதைக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சிம் கார்டுகள்
பயனர்கள் 90 நாட்களுக்குள் எந்த எண்களை செயலில் வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். பயனர்கள் செயலில் உள்ள எண்களைப் பற்றி தொலைத்தொடர்புத் துறைக்குத் தெரிவிக்கவில்லை என்றால் அந்த சிம் கார்டுகள் அனைத்தும் முடக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பீகாரில் சிலர் தங்கள் பெயரில் 100-200க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
Amazon Discount: ஒன்பிளஸ் நோர்ட் 4 போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி! அதிரடி விலை குறைப்பு!
சிம் கார்டுகள் முடக்கம்
மொத்தமாக முடக்கப்பட உள்ள 27 லட்சம் சிம் கார்டுகளில் சுமார் 24 லட்சம் சிம் கார்டுகள் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது. மீதி 3 லட்சம் சிம் கார்டுகள் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். சிம்கள் முடக்கப்பட உள்ளது குறித்து அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் இந்த தகவலை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளன.
ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கு எந்த தடையும் இல்லை. யார் வேண்டுமானாலும் எத்தனை சிம் கார்டுகளையும் வாங்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை. எந்தவொரு தனி நபரும் ஒரு ஐடியில் 9 சிம் கார்டுகளை மட்டுமே செயலில் வைத்திருக்க முடியும். 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருந்தால் அவை முடக்கப்படும்.
மேலும் இது தண்டனைக்குரிய குற்றமாகும். தொடர்ந்து ஒருவர் அதிக சிம் கார்டுகளை வைத்திருப்பது தெரியவந்தால் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். நீங்கள் வைத்திருக்கும் சட்டவிரோத சிம்கள் மோசடிகளுக்கு காரணமாக இருந்தால் சிறை செல்லவும் நேரிடும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஜாக்பாட்! 5 ரூபாய்க்கு 120 ஜிபி டேட்டா! அதிரடி பிளான்!