பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஜாக்பாட்! 5 ரூபாய்க்கு 120 ஜிபி டேட்டா! அதிரடி பிளான்!
பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் 5 ரூபாய்க்கு அதிக டேட்டாவை வாரி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஜாக்பாட்! 5 ரூபாய்க்கு 120 ஜிபி டேட்டா! அதிரடி பிளான்!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறை சேவையில் முன்னணியில் இருந்தாலும் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையையே செயல்படுத்தாத நிலையிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து இருப்பதற்கு அது குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருவதே காரணமாகும். அந்த வகையில் பிஎஸ்என்எல் மிகவும் குறைந்த விலையில் டேட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
பிஎஸ்என்எல் டேட்டா பிளான்
அதாவது பிஎஸ்என்எல் வழங்கும் இந்த திட்டத்தின் விலை ரூ.277 ஆகும். இந்த திட்டத்தின்படி உங்களுக்கு மொத்தமாக 120ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த பிளானின் வேலிடிட்டி 60 நாட்களாகும். இதன் கணக்குபடி பார்த்தால் உங்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வருகிறது. 60 நாளில் இந்த பிளானின் விலையை கணக்குப் போட்டு பார்த்தால் ஒரு நாளைக்கு 5 ரூபாய் செலவில் நீங்கள் தினமும் 2ஜிபி டேட்டாவை பெற முடிகிறது.
மொத்தாக 120 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்டதில் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்தாலும் 40kbps வேகத்த்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் என வேறு எந்த சலுகையும் இதில் கிடையாது. குறைந்த விலையில் அதிக டேட்டாவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிளான் சரியான தேர்வாக இருக்கும்.
ஜியோ கஸ்டமர்களுக்கு அடித்தது ரியல் ஜாக்பாட்! 1 இல்ல 4 திட்டங்களில் அதிரடி மாற்றம்
பிஎஸ்என்எல் மலிவு விலை திட்டங்கள்
ஆனால் இந்த சலுகையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பயனர்கள் செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். 277 ரூபாயில் 120 ஜிபி டேட்டா என்பது ஜியோ, ஏர்டெல், வோடோபோன் என யாரும் தரமுடியாத சூப்பர் ஆபர் ஆகும். ஜியோவை எடுத்துக் கொண்டால் 30 நாள் வேலிடிட்டி கொண்ட 30 ஜிபி டேட்டாவுக்கு 219 ரூபாய் கட்டணம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 4ஜி
வாடிக்கையளர்களுக்காக மலிவு விலை திட்டங்களை செயல்படுத்தி வரும் பிஎஸ்என்எல், நாடு முழுவதும் 4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்களில் 4ஜி டவர்கள் அமைக்கபப்ட்டு வருகின்றன. இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சிக்னல் கிடைக்கும் நிலையில், விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவை வர உள்ளது.
ஜியோ, ஏர்டெலை இறங்கி அடிக்கும் பிஎஸ்என்எல்; வேலிடிட்டி, டேட்டாவை வாரி வழங்கும் பிளான்!