ஜியோ, ஏர்டெலை இறங்கி அடிக்கும் பிஎஸ்என்எல்; வேலிடிட்டி, டேட்டாவை வாரி வழங்கும் பிளான்!
பிஎஸ்என்எல் அதிக வேலிடிட்டி, டேட்டாவை வாரி வழங்கும் ஒரு சூப்பர் பிளானை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ, ஏர்டெலை இறங்கி அடிக்கும் பிஎஸ்என்எல்; வேலிடிட்டி, டேட்டாவை வாரி வழங்கும் பிளான்!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தாலும், மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டுக்கு (பிஎஸ்என்எல்) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையையே தொடங்காத நிலையிலும், அதற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருதே ஆகும்.
பிஎஸ்என்எல் பிளான்கள்
அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு சூப்பரான மலிவு விலை திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் ரூ.345 என்ற விலையில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின்படி 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை வழங்குகிறது. அத்துடன் தினமும் 1ஜிபி டேட்டாவை பெறலாம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் பெறலாம்.
குறைந்த விலையில் சிம்மை செயலில் வைத்திருக்கவும், ஒவ்வொரு நாளும் லேசான டேட்டாவைப் பயன்படுத்தவும் விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும். தினமும் கூடுதல் டேட்டா வேண்டும் என நீங்கள் நினைத்தால் ரூ.347 என்ற திட்டத்தையும் பிஎஸ்என்எல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.345 திட்டத்தை விட ரூ.2 அதிகம். இருப்பினும், இதில், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, தினம்மும் 100 எஸ்எம்எஸ்கள் பெறலாம்.
வருடத்திற்கு ஒருமுறை ரீசாஜ் செய்தால் போதும்! BSNL-ன் அசத்தல் திட்டம்!
பிஎஸ்என்எல் மலிவு விலை திட்டங்கள்
மிக முக்கியமாக தினமும் 2ஜிபி டேட்டாவை பெற முடியும். இந்த திட்டம் 54 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.347 திட்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் இதில் வேலிடிட்டி 6 நாட்கள் குறைகிறது. ஆனாலும் இந்த இரண்டு திட்டங்களில் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. உங்கள் சிம்மை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆக்டிவாக வைத்திருக்க இந்த பிளான்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை
பிஎஸ்என்எல் 4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் எனவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் நாடு முழுவதும் நடப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சோதனையும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புது ஐபோனுடன் காதலர் தினம் கொண்டாடுங்க! டக்கரான ஆஃபர் கொடுக்கும் பிளிப்கார்ட்!