MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரூ.1க்கு சிம் கார்டு… தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் கால்.. பிஎஸ்என்எல் சூப்பர் ஆஃபர்!

ரூ.1க்கு சிம் கார்டு… தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் கால்.. பிஎஸ்என்எல் சூப்பர் ஆஃபர்!

பிஎஸ்என்எல் நிறுவனம் 'ரூ.1 Freedom Plan' என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய பயனர்களுக்கு ரூ.1-க்கு சிம் கார்டுடன், 30 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 21 2026, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிஎஸ்என்எல் 1 ரூபாய் திட்டம்
Image Credit : Gemini

பிஎஸ்என்எல் 1 ரூபாய் திட்டம்

மொபைல் ரீசார்ஜ் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மிகக் குறைந்த விலையில் அதிக நன்மைகள் தரும் ஒரு புதிய சலுகை சந்தையில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, ரூ.1க்கு சிம் கார்டு, தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 30 நாள் வேலிடிட்டி என்ற ஆஃபர் யாரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சலுகை தற்போது தொலைத்தொடர்பு வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

25
இந்தியாவின் மலிவான சிம் திட்டம்
Image Credit : gemini

இந்தியாவின் மலிவான சிம் திட்டம்

இந்த திட்டத்தை கொண்டு வந்தது பிஎஸ்என்எல். ‘ரூ.1 Freedom Plan’ என்ற பெயரில் அறிமுகமான இந்த ஆஃபர் புதிய பயனர்களுக்காகவே உள்ளது. இதில் வழங்கப்படும் சிம் கார்டு 30 நாட்கள் செயல்படும். தினமும் 2GB டேட்டா, வரம்பில்லா வாய் அழைப்புகள், மற்றும் 100 SMS வசதியும் இதில் அடங்கும். இது பொதுவான பயன்பாடுகளுக்கு போதுமானதாக இருக்கும்.

Related Articles

Related image1
7000mAh பேட்டரி, 200MP கேமரா.. ஹானர் 600 சீரிஸ் ஏப்ரல் 23 வெளியீடு.. அம்சங்கள் இதோ!
Related image2
அடிமட்ட ரேட்டில் 6500mAh பேட்டரி.. AI அம்சங்களுடன் 5ஜி போன்.. விலை, அம்சங்கள் இதோ
35
பிஎஸ்என்எல் புதிய ரீசார்ஜ் திட்டம்
Image Credit : X

பிஎஸ்என்எல் புதிய ரீசார்ஜ் திட்டம்

இந்த சிம் கார்டை பெற ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. இது ஆன்லைனில் கிடைக்காது. பிஎஸ்என்எல் சேவை மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே நேரடியாக பெற முடியும். வாங்கும் போது KYC கட்டாயம். மேலும், இந்த சலுகை 2026 ஏப்ரல் 30 வரை மட்டுமே கிடைக்கும். அதனால் இது ஒரு குறுகிய கால வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

45
தினமும் 3ஜிபி டேட்டா
Image Credit : X

தினமும் 3ஜிபி டேட்டா

30 நாட்கள் முடிந்தது, தொடர்ந்து சேவையைப் பயன்படுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதற்காக பிஎஸ்என்எல் பல குறைந்த விலை திட்டங்களையும் வழங்குகிறது. ரூ.153 ரீசார்ஜில் 24 நாட்கள், தினம் 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் கிடைக்கும். அதிக டேட்டா தேவையுள்ளவர்களுக்கு ரூ.599 திட்டம் 70 நாட்கள், தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ரூ.2799 ஆண்டு திட்டத்தில் 365 நாட்கள், தினம் 3ஜிபி டேட்டா மற்றும் காலிங் வசதி உள்ளது.

55
ரூ.499 ஓடிடி அட்-ஆன் பேக்
Image Credit : Getty

ரூ.499 ஓடிடி அட்-ஆன் பேக்

இதற்கு கூடுதலாக, பொழுதுபோக்குக்காக ரூ.499 ஓடிடி அட்-ஆன் பேக் வழங்கப்படுகிறது. இதில் பல பிரபல ஓடிடி தளங்களை பயன்படுத்தலாம். மொத்தத்தில், குறைந்த செலவில் அதிக நன்மைகள் தரும் சேவைகளை வழங்கும் நிறுவனமாக பிஎஸ்என்எல் தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறது. ரூ.1 Freedom Plan, குறைந்த செலவில் புதிய சிம் தேடுபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
மறுஊட்டத் திட்டம்
நகர்பேசி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அடிமட்ட ரேட்டில் 6500mAh பேட்டரி.. AI அம்சங்களுடன் 5ஜி போன்.. விலை, அம்சங்கள் இதோ
Recommended image2
சார்ஜ் ஏறியதும் தானாகவே கழன்று கொள்ளும் 'மேஜிக்' சார்ஜர்: சீன நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு..!
Recommended image3
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.. ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர்வு.. முழு விபரம் உள்ளே!
Related Stories
Recommended image1
7000mAh பேட்டரி, 200MP கேமரா.. ஹானர் 600 சீரிஸ் ஏப்ரல் 23 வெளியீடு.. அம்சங்கள் இதோ!
Recommended image2
அடிமட்ட ரேட்டில் 6500mAh பேட்டரி.. AI அம்சங்களுடன் 5ஜி போன்.. விலை, அம்சங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved