MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 7000mAh பேட்டரி, 200MP கேமரா.. ஹானர் 600 சீரிஸ் ஏப்ரல் 23 வெளியீடு.. அம்சங்கள் இதோ!

7000mAh பேட்டரி, 200MP கேமரா.. ஹானர் 600 சீரிஸ் ஏப்ரல் 23 வெளியீடு.. அம்சங்கள் இதோ!

பிரபல டெக் நிறுவனமான ஹானர், தனது புதிய ஹானர் 600 மற்றும் ஹானர் 600 Pro ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 23 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸ், ஸ்னாப்டிராகன் சிப்செட்கள், 7,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி, 200MP பிரதான கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 19 2026, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஹானர் 600 சீரிஸ் மொபைல்
Image Credit : Google

ஹானர் 600 சீரிஸ் மொபைல்

பிரபல டெக் நிறுவனமான ஹானர் தனது புதிய ஹானர் 600 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த சீரியஸில் ஹானர் 600 மற்றும் ஹானர் 600 Pro என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெற உள்ளது. ஆனால் வெளியீட்டுக்கு முன்பே, நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் சில முக்கிய அம்சங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், டெக் உலகில் எதிர்பார்ப்பு சூடுபிடித்துள்ளது.

24
ஹானர் 600 Pro மாடல்
Image Credit : Google

ஹானர் 600 Pro மாடல்

இந்த புதிய சீரிஸின் முக்கிய பலம் அதன் செயல்திறனும் பேட்டரியும் தான். ஹானர் 600 Pro மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டால் இயங்கும் என்ற தகவல்கள் கூறுகின்றன. மற்றொரு பக்கம், ஹானர் 600 மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 SoC இடம்பெறும். இரண்டு மாடல்களிலும் 7,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இதில் ப்ரோ மாடலுக்கு மட்டும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

Related Articles

Related image1
மொபைல் மாதிரி வசதிகள்.. ரூ.1 லட்சத்தில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது!
Related image2
வீட்டிலிருந்தே சிலிண்டர் இணைப்பு மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி..? நிமிஷத்தில் சரி செய்ய முழுமையான வழிகாட்டி
34
ஹானர் 600 அம்சங்கள்
Image Credit : Google

ஹானர் 600 அம்சங்கள்

டிசைன் பக்கத்தில், இரண்டு போன்களும் 7.8மீ தடிமனுடன் ஸ்லீக் மற்றும் பிரீமியம் லுக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்டல் ஃபிரேம், மேட் ஃபினிஷ் ஆகியவை இதற்கு ஒரு உயர்தர தோற்றத்தை வழங்குகின்றன. மிக மெல்லிய 0.98மிமீ பெசல்களுடன் கூடிய டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், IP68, IP69, IP69K போன்ற உயர்தர சான்றிதழ்கள் மூலம் தூசி மற்றும் தண்ணீருக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது. எடையில் புரோ மாடல் சுமார் 200 கிராம் மற்றும் ஸ்டாண்டர்ட் மாடல் 190 கிராம் இருக்கும்.

44
ஹானர் 600 சீரிஸ் கேமரா
Image Credit : Google

ஹானர் 600 சீரிஸ் கேமரா

கேமரா விஷயத்தில் இந்த சீரியஸ் கண்கவர் திறனை வெளிப்படுத்துகிறது. ஹானர் 600 Pro மாடலில் 200MP பிரதான கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ (3.5x ஜூம்), மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகிய மூன்று கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 600 மாடலில் 200MP முதன்மை கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் கொண்ட டூயல் கேமரா அமைப்பு உள்ளது. இரண்டிலும் 50MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது. பிளாக், கோல்டன் வைட், ஆரஞ்சு போன்ற நிறங்களில் வரும் இந்த சீரீஸ், சந்தையில் புதிய போட்டியை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
நுட்பக் கருவி
திறன் பேசி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜியோவின் மெகா ஹிட் சலுகை: ரூ.149-க்கு ரீசார்ஜ் செஞ்சா 3 மாசம் ஹாட்ஸ்டார் ஃப்ரீ..!
Recommended image2
ரூ.4,399-க்கு புதிய ஏர் கூலர் அறிமுகம்.. வீடு, கடை எல்லாம் இடத்திலும் இனி இதுதான்
Recommended image3
கூகுள் பிக்சல் லேப்டாப் வருது.. MacBook-க்கு நேரடி போட்டி.. ஆரம்பமே அசத்தல்.!
Related Stories
Recommended image1
மொபைல் மாதிரி வசதிகள்.. ரூ.1 லட்சத்தில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது!
Recommended image2
வீட்டிலிருந்தே சிலிண்டர் இணைப்பு மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி..? நிமிஷத்தில் சரி செய்ய முழுமையான வழிகாட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved