MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மொபைல் மாதிரி வசதிகள்.. ரூ.1 லட்சத்தில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது!

மொபைல் மாதிரி வசதிகள்.. ரூ.1 லட்சத்தில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது!

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் 7 இன்ச் டிஎப்டி டச்ஸ்கிரீன் போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 10 2026, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டச் ச்ஸ்கிரீன் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
Image Credit : Google

டச் ச்ஸ்கிரீன் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் தேவை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் விலை ஏற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற காரணங்களால் மக்கள் மின்சார வாகனங்களை அதிகமாக தேர்வு செய்கிறார்கள். இதற்கு ஏற்ப நிறுவனங்களும் ஸ்கூட்டர்களை ‘ஸ்மார்ட்’ ஆக மாற்றிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 7 இன்ச் டிஎப்டி டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் தற்போது பல மாடல்களில் அறிமுகமாகி, பயனர் அனுபவத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்கின்றன.

25
ஓலா ஸ்கூட்டர்
Image Credit : ola

ஓலா ஸ்கூட்டர்

இந்த வரிசையில் ஓலா S1 Pro Gen 3 முக்கிய இடம் பிடிக்கிறது. 7 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் MoveOS 5 மூலம் இயங்கும் இந்த ஸ்கூட்டர், SOS அலர்ட், நெவிகேஷன், டிஜிட்டல் கீ, க்ரூஸ் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற பல முன்னேற்றமான அம்சங்களுடன் வருகிறது. பயண அனுபவத்தை எளிமையாக்குவதோடு, பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. ரூ.1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையிலேயே இந்த அளவிலான வசதிகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
பைக் இருந்தா போதும்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! ஸ்மார்ட்டா வருமானம் ஈட்ட இவ்ளோ வழிகள் இருக்கா?
Related image2
Honda WN7: ஒரு சார்ஜில் 140 கிமீ! 30 நிமிடத்தில் புல் சார்ஜ்! ஹோண்டா WN7 எலக்ட்ரிக் பைக்.. என்ன ஸ்பெஷல்?
35
ஏதர் ரிஸ்ட்டா ஸ்கூட்டர்
Image Credit : our own

ஏதர் ரிஸ்ட்டா ஸ்கூட்டர்

அடுத்து ஏதர் ரிஸ்ட்டா இந்திய சந்தையில் விரைவாக பிரபலமாகி வருகிறது. இதன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் டாஷ்போர்டு ஸ்வைப், ஜூம் போன்ற சைகை கட்டுப்பாடுகளையும் ஆதரிக்கிறது. நேரலை இருப்பிடப் பகிர்வு, கூகுள் மேப்ஸ் நெவிகேஷன், விபத்து எச்சரிக்கை, சறுக்கல் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ரூ.1.30 லட்சம் முதல் கிடைக்கும் இந்த மாடல், குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாக பார்க்கப்படுகிறது.

45
சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்
Image Credit : our own

சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்

மேலும் சிம்பிள் ஒன் அதன் நீண்ட ரேஞ்ச் மற்றும் ஸ்மார்ட் அம்சங்களால் கவனம் ஈர்க்கிறது. 7 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் நெவிகேஷன், கால்கள் மற்றும் மியூசிக் அலர்ட்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. 4.5 kWh மற்றும் 5.0 kWh பேட்டரி விருப்பங்களுடன் வரும் இந்த ஸ்கூட்டர், ஒரு முறை சார்ஜில் 26 கி.மீ வரை செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.1.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இது கிடைக்கிறது.

55
டிவிஎஸ் ஸ்கூட்டர்
Image Credit : Google

டிவிஎஸ் ஸ்கூட்டர்

இதேபோல் டிவிஎஸ் iQube ST மாடலும் பிரீமியம் வசதிகளுடன் வருகிறது. 7 இன்ச் டச்ஸ்கிரீன், OTA அப்டேட்ஸ், ஜியோ-ஃபென்சிங், ஆண்டி-தீஃப் அலர்ட், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற பல அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 3.5 kWh மற்றும் 5.3 kWh பேட்டரி விருப்பங்களுடன் 212 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. மொத்தத்தில், இன்றைய மின்சார ஸ்கூட்டர்கள் வெறும் போக்குவரத்து சாதனமாக இல்லாமல், நவீன டெக்னாலஜி கொண்ட ‘ஸ்மார்ட்’ சாதனங்களாக மாறி வருகின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்சார ஸ்கூட்டர்
உருளி வண்டிகள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bajaj Pulsar 180: அப்பாச்சி பைக்குடன் நேரடி போட்டி.. மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்த பல்சர் 180! விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?
Recommended image2
பட்ஜெட் விலையில் கெத்தான SUV; ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் இந்தியாவின் டாப் கார்கள்
Recommended image3
Hyundai Offers: ஏப்ரல் மாத ஆஃபர்கள் அள்ளி வீசும் ஹூண்டாய்.. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?
Related Stories
Recommended image1
பைக் இருந்தா போதும்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! ஸ்மார்ட்டா வருமானம் ஈட்ட இவ்ளோ வழிகள் இருக்கா?
Recommended image2
Honda WN7: ஒரு சார்ஜில் 140 கிமீ! 30 நிமிடத்தில் புல் சார்ஜ்! ஹோண்டா WN7 எலக்ட்ரிக் பைக்.. என்ன ஸ்பெஷல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved