- Home
- Auto
- Honda WN7: ஒரு சார்ஜில் 140 கிமீ! 30 நிமிடத்தில் புல் சார்ஜ்! ஹோண்டா WN7 எலக்ட்ரிக் பைக்.. என்ன ஸ்பெஷல்?
Honda WN7: ஒரு சார்ஜில் 140 கிமீ! 30 நிமிடத்தில் புல் சார்ஜ்! ஹோண்டா WN7 எலக்ட்ரிக் பைக்.. என்ன ஸ்பெஷல்?
பிரபல ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் பைக் WN7, 'கோல்டு iF டிசைன்' விருதை வென்றுள்ளது. பேட்டரியே ஃபிரேமாக செயல்படும் இதன் வித்தியாசமான டிசைன், சிங்கிள் சார்ஜில் 140 கி.மீ ரேஞ்ச் தருகிறது.

ஹோண்டாவின் WN7 பைக்
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் பைக் WN7 இப்போ செம வைரல். இந்த பைக் மதிப்புமிக்க 'கோல்டு iF டிசைன்' விருதை வென்றுள்ளது. ஆனால், இது விருதுக்காக மட்டுமல்ல, அதன் தனித்துவமான டிசைன் மற்றும் செயல்திறனுக்காகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக் சிங்கிள் சார்ஜில் 140 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தருகிறது. தினசரி பயன்பாட்டிற்கும், ஹை-ஸ்பீடு விரும்பிகளுக்கும் இது ஒரு சரியான சாய்ஸ். எதிர்கால எலக்ட்ரிக் பைக்குகள் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டம் காட்டுகிறது.
ஸ்போர்ட் மாடலில் பைக்
பெரும்பாலான எலக்ட்ரிக் பைக்குகள் பார்க்க வித்தியாசமாகவோ அல்லது பெட்ரோல் பைக்குகளின் போன்று இருக்கும். ஆனால், இந்த பைக் அப்படி இல்லை. ஹோண்டா இந்த பைக்கை மிகவும் சிம்பிளாகவும், ஸ்டைலாகவும் வடிவமைத்துள்ளது. எந்தவிதமான டிசைனும் இல்லாமல், மாடர்ன் 'ஓப்பன் ஸ்போர்ட்' மாடலில் இருக்கிறது. இது ஹோண்டாவின் பிரபலமான 'சிபி (CB)' சீரிஸ் பைக்குகளைப் போலவே தோற்றமளிப்பதால், ஓட்டுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
குறைந்த எடை கொண்ட பைக்
இந்த பைக்கின் மிகப்பெரிய சிறப்பு அம்சமே, இதில் தனியாக ஹெவி ஃபிரேம் இல்லை என்பதுதான். பைக்கின் பேட்டரியை மறைக்காமல், அதை பைக்கின் மையப் பகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர். பேட்டரியே பைக்கின் ஃபிரேம் போல செயல்படுவதால், பைக்கின் எடை குறைந்து, பார்க்கவும் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது.
வேகமாகச் செல்லும் திறன் கொண்டது
ஹோண்டாவின் இந்த எலக்ட்ரிக் பைக் டிசைனில் மட்டுமல்ல, பெர்ஃபார்மென்ஸிலும் அசத்துகிறது. இந்த பைக் சுமார் 67 ஹார்ஸ்பவர் மற்றும் 100 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதன் பிக்கப் அபாரமாக இருப்பதால், மிக வேகமாகச் செல்லும் திறன் கொண்டது. நகரப் பகுதிகளில் தினசரி பயன்பாட்டிற்கும், வார இறுதி லாங் டிரைவ் விரும்பும் வேகப் பிரியர்களுக்கும் இது ஒரு சூப்பர் சாய்ஸ்.
130 முதல் 140 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்
இந்த எலக்ட்ரிக் பைக்கில் 9.3 kWh லித்தியம்-அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ரேஞ்சைப் பொறுத்தவரை, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், நகரப் பகுதிகளில் சுமார் 130 முதல் 140 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். மேலும், இந்த பைக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 30 நிமிடங்களில் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்துவிடலாம் என நிறுவனம் கூறுகிறது.

