குறைந்த விலையில் கேமரா கிங்..! ரூ.30 ஆயிரம் கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த கேமரா போன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இங்கு ஐந்து சிறந்த மாடல்களின் கேமரா சிறப்பம்சங்கள் மற்றும் விலைகளை பார்க்கலாம்.

ரூ.30000 கீழ் போன்
ஸ்மார்ட்போன் சந்தையில் கேமரா போன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆப்பிள், சாம்சங் போன்ற பிராண்டுகள் கேமராவில் கவனம் செலுத்துகின்றன. ரூ.30,000-க்குள்ளும் சிறந்த கேமரா போன்கள் உள்ளன.
நத்திங் போன் 3a
நத்திங் போன் 3a, 3X பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் வருகிறது. 50MP மெயின், 8MP அல்ட்ராவைடு கேமராக்கள் உள்ளன. 8GB + 128GB மாடலின் விலை ரூ.29,999.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவில் 50MP மெயின், 50MP அல்ட்ராவைடு, 10MP டெலிஃபோட்டோ கேமராக்கள் உள்ளன. 50MP செல்ஃபி கேமரா. 8GB + 256GB மாடலின் விலை ரூ.29,999.
விவோ V60e
விவோ V60e-ல் 200MP மெயின் கேமரா, 50MP செல்ஃபி கேமரா உள்ளது. ஆரா லைட் ஆதரவுடன் குறைந்த ஒளியிலும் சிறந்த படங்கள் எடுக்கலாம். 8GB + 128GB மாடல் விலை ரூ.29,999.
ரியல்மி 15 ப்ரோ 5ஜி
ரியல்மி 15 ப்ரோ 5ஜி-ல் சோனி IMX896 சென்சாருடன் 50MP டூயல் ரியர் கேமரா, 50MP செல்ஃபி கேமரா உள்ளது. 7000mAh பேட்டரி. 8GB + 128GB வேரியண்ட் விலை ரூ.28,999.
விவோ T4 ப்ரோ
விவோ T4 ப்ரோவில் 50MP டூயல் ரியர் கேமரா, 32MP செல்ஃபி கேமரா உள்ளது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட். 6.77-இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே. 8GB + 128GB விலை ரூ.27,999.