பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இனி ராஜயோகம்; 'ஹை ஸ்பீடு' இன்டர்நெட்; 4ஜி இ-சிம் எப்போது?
பிஎஸ்என்எல் 4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இ-சிம் விரைவில் வழங்க உள்ளது.
BSNL 4G Service
பிஎஸ்என்எல்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 3ஜி, 4ஜி என்பதையும் தாண்டி 5ஜி சேவை வரை வந்து விட்டன. ஆனால் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது.
ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியவுடன் அங்கு இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்தனர். ஆனால் அதன்பிறகு திடீரென பிஎஸ்என்எல்லில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வெளியே சென்றனர். மோசமான நெட்வொர்க் மற்றும் 4ஜி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
BSNL e-SIM
4ஜி சேவை
இதனால் உஷாரான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்என்எல் இதுவரை நாடு முழுவதும் 75,000 4ஜி டவர்களை நிறுவியுள்ளது. விரைவில் 1,00,000 4ஜி டவர்கள் என்ற இலக்கை எட்ட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிஎஸ்என்எல் விரைவில் இ-சிம் (eSIM) சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வுக்குப் பிறகு, பல மாதங்களாக புதிய பயனர்களைச் சேர்த்த ஒரே ஆபரேட்டராக பிஎஸ்என்எல் மட்டுமே இருந்தது. இதற்குப் பிறகு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தொடங்கியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நேரடியாக நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே பிஎஸ்என்எல் 4ஜி சேவையை மிக விரைவில் கொண்டு வர துடிப்புடன் இருக்கிறது.
ரீசார்ஜ் செய்யாமலே சிம் கார்டு ஆக்டிவாக இருக்கும்! டிராய் விதி என்ன தெரியுமா?
BSNL Recharge Plan
3ஜி நெட்வொர்க் முடக்கப்படும்
பிஎஸ்என்எல் 4ஜி சேவை வரும்போது முன்பு இருந்து இயங்கி வந்த 3ஜி நெட்வொர்க் முடக்கப்படும். முதற்கட்டமாக சில இடங்களில் 3G நெட்வொர்க்கை நிரந்தரமாக பிஎஸ்என்எல் நிறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கப்படும் இடங்களில் 3ஜி சிம்கள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காலிங் வசதி மட்டுமே கிடைக்கும், டேட்டா வசதி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
BSNL Budget Plan
4ஜி இ-சிம் பெறுவது எப்படி?
3ஜி நெட்வொர்க் வேலை செய்வதை நிறுத்தினால், புதிய 4ஜி இ-சிம் உங்களுக்கு கிடைக்கும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று பழைய 3ஜி சிம் கார்டுகளை கொடுத்து விட்டு புதிய 4ஜி சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது.
டிராய் போட்ட போடு; இனி 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டங்கள்; இறங்கி வரும் ஜியோ, ஏர்டெல்!