MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரீசார்ஜ் செய்யாமலே சிம் கார்டு ஆக்டிவாக இருக்கும்! டிராய் விதி என்ன தெரியுமா?

ரீசார்ஜ் செய்யாமலே சிம் கார்டு ஆக்டிவாக இருக்கும்! டிராய் விதி என்ன தெரியுமா?

TRAI SIM Card Active rule: ரீசார்ஜ் திட்டம் இல்லாமல் உங்கள் சிம் கார்டை எத்தனை நாட்களுக்கு ஆக்டிவாக வைத்திருக்க முடியும் தெரியுமா? இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சமீபத்தில் சிம் கார்டுகளின் விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி, உங்கள் சிம்மை ரீசார்ஜ் செய்யாமலே பல மாதங்களுக்கு ஆக்டிவாக வைத்திருக்கலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Jan 18 2025, 11:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உங்கள் சிம்மை ரீசார்ஜ் செய்யாவிட்டால், அது எத்தனை நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பலருக்கு சிம் கார்டின் வேலிடிட்டி பற்றி தெரியாது. இந்நிலையில், இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டையும் ஆக்டிவாக வைத்திருப்பதில் பிரச்சனை எழுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

சமீபத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சிம் கார்டு தொடர்பான சில விதிகளை வெளியிட்டுள்ளது. TRAI இன் புதிய விதிகள் மொபைல் பயனர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மொபைல் ரீசார்ஜ் திட்டம் காலாவதியாகிவிட்டாலும், உடனடியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. ரீசார்ஜ் திட்டம் இல்லாமல் உங்கள் சிம் கார்டு பல மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.

35

நீங்கள் ஜியோ சிம்மைப் பயன்படுத்தினால், ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்களுக்கு உங்கள் சிம்மை ஆக்டிவாக வைத்திருக்கலாம். 90 நாட்களுக்குப் பிறகு, ரீ-ஆக்டிவேஷன் திட்டத்தில் ரீசாரஜ் செய்து உங்கள் எண்ணைச் ஆக்டிவேட் செய்ய வேண்டும். ரீசார்ஜ் திட்டம் முடிந்ததும், வரும் அழைப்புகளைப் பேசும் வசதி ஒரு மாதம், ஒரு வாரம் என பயனர்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. சிலருக்கு ஒரே நாளில் வரும் அழைப்புகளும் தடைபடுகின்றன. 90 நாட்களுக்கு ஜியோ நம்பர் ஆக்டிவாக இல்லை என்றால், அதன் பிறகு உங்கள் எண்ணை நிரந்தரமாக இழக்க நேரிடும். அது வேறொருவருக்கு மாற்றிக் கொடுக்கப்படும்.

45

நீங்கள் ஏர்டெல் சிம் கார்டைப் பயன்படுத்தினால், ரீசார்ஜ் செய்யாமல் சிம் கார்டை 60 நாட்களுக்கு மட்டுமே செயலில் வைத்திருக்க முடியும். 60 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் ரூ.45 மதிப்புள்ள வேலிடிட்டி திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Vi சிம் கார்டு பயன்படுத்தினால், ரீசார்ஜ் திட்டம் இல்லாமல் உங்கள் சிம் கார்டு 90 நாட்களுக்கு ஆக்டிவாக இருக்கும். அதற்குப் பிறகு, சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க ரூ.49 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

55

பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளர்கள் நீண்ட நாள்  ரீசார்ஜ் இல்லாமலே இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். பிஎஸ்என்எல் சிம் கார்டைத்தான் ரீசார்ஜ் செய்யாமல் அதிக நாட்கள் ஆக்டிவாக வைத்திருக்க முடியும். 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, ரீசார்ஜ் திட்டம் முடிந்த பிறகும் உங்கள் எண் 180 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஏர்டெல்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரண்: டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் இதோ!
Recommended image2
Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு
Recommended image3
Honor Robot Phone: தானாக சுழலும் கேமராவுடன் ஹானர் ரோபோட் போன்! இனி கேமராமேன் தேவையில்லை! செம மாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved