பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஜாக்பாட்! 2 ரீசார்ஜ் பிளான்களில் ஒரு மாத வேலிடிட்டி இலவசம்!
பிஎஸ்என்எல் நிறுவனம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 2 பிளான்களுக்கான வேலிடிட்டியை ஒரு மாதம் நீட்டித்துள்ளது. இதற்கு கூடுதாக எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

BSNL 2 Plans Validity Extended: முன்னணி அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பயனர்களை ஈர்க்கும் திசையில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் 4ஜி சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் புதிய டவர்களை அமைத்து வருகிறது. 5ஜி நெட்வொர்க்கையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வரும் அதே வேளையில், பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஒரு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL
அதாவது ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் திட்டத்திற்கான வேலிடிட்டியை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில் தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பு சில நாட்களுக்கு, மார்ச் 1 முதல் 31 வரை மட்டுமே கிடைக்கும்.இந்த சலுகை என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
JIO Plan: இலவச டேட்டா, ஓடிடியை வாரி வழங்கும் ஜியோவின் 5 பெஸ்ட் பிளான்!
BSNL Best Plan
ரூ.1,499 திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் சிறந்த திட்டங்களில் ரூ.1499 திட்டம் ஒன்றாகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், பயனர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள், இலவச தேசிய ரோமிங், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் 24 ஜிபி வரை அதிவேக இணையம் கிடைக்கும். அதன் பிறகு இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். 336 நாட்கள் இருந்த வேலிடிட்டி 365 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாத வேலிடிட்டியை இலவசமாகப் பெறலாம்.
BSNL Budget Plan
ரூ.2,399 திட்டம்
மற்றொரு திட்டத்திற்கும் பிஎஸ்என்எல் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. ரூ.2399 திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்களாக இருந்தது, ஹோலி சலுகையின் கீழ் இந்த வேலிடிட்டி 425 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், டெல்லி, மும்பை பகுதிகளில் எம்டிஎன்எல் நெட்வொர்க்கில் இலவச அழைப்புகள் போன்ற நன்மைகளைப் பெறலாம். கூடுதலாக, பிஎஸ்என்எல் பயனர்களுக்கு பிஐடிவி இலவச சந்தா மற்றும் சில ஓடிடி பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.
ஜியோ யூஸ் பண்றீங்களா? நெருக்கமானவங்களோட கால் ஹிஸ்டரி-ய இந்த வழிகள்-ல பார்க்கலாம்