JIO Plan: இலவச டேட்டா, ஓடிடியை வாரி வழங்கும் ஜியோவின் 5 பெஸ்ட் பிளான்!
இலவச டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, இலவச ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் உட்பட பல சலுகைகளை வழங்கும் ஜியோவின் 5 ஜியோ திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Relainace JIO Best Plan: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல திட்டங்களை வழங்குகிறது. தற்போது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இலவச டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, இலவச ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன், இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகள் குறித்த தகவல் இங்கே உள்ளது. குறிப்பாக இந்த திட்டம் 189 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மேலும் ஒரு மாத வேலிடிட்டி இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ பிளான்
ஜியோ 189 ரூபாய் திட்டம்
இது பட்ஜெட் நட்பு திட்டம். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி இருக்கும். ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வசதி கிடைக்கும். மேலும் ஜியோ ஆப் அணுகல் கிடைக்கும். கூடுதலாக 2ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். இந்த இலவச டேட்டா 4ஜி டேட்டா ஆகும். அதிக டேட்டா பயன்படுத்தாதவர்களுக்கு இந்த திட்டம் பொருத்தமானது.
ஜியோ பட்ஜெட் பிளான்கள்
ஜியோ 198 ரூபாய் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ 198 ரூபாய் திட்டம் ரீசார்ஜ் செய்தால் 5ஜி டேட்டா வசதி கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 1 டேட்டா இலவசமாக கிடைக்கும். அன்லிமிடெட் அழைப்பு வசதி, 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வேலிடிட்டி 14 நாட்கள் இருக்கும்.
ஜியோ யூஸ் பண்றீங்களா? நெருக்கமானவங்களோட கால் ஹிஸ்டரி-ய இந்த வழிகள்-ல பார்க்கலாம்
ஜியோ குறைந்த விலை திட்டங்கள்
ஜியோ 199 ரூபாய் திட்டம்
5ஜி டேட்டா வேகத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு, குறைந்த விலை திட்டம் தேவைப்பட்டால், இந்த ரீசார்ஜ் திட்டம் பொருத்தமானது. 18 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி உள்ளது. கூடுதலாக ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது.
ஜியோதிட்டங்கள்
ஜியோ 201 ரூபாய் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ 201 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் மற்ற குறைந்த விலை திட்டங்களைப் போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். கூடுதலாக ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும்.
ஜியோ ரீசார்ஜ் பிளான்கள்
ஜியோ 239 ரூபாய் திட்டம்
ஜியோ மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தில் 239 ரூபாயும் அடங்கும். 22 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் உள்ளது. அன்லிமிடெட் கால், ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டா வசதியும் இதில் உள்ளது.
இதனுடன் 28 நாட்கள் வேலிடிட்டி தேவைப்பட்டால் 249 ரூபாய் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மற்றபடி ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட மற்ற வசதிகள் கிடைக்கும். ஜியோ மலிவு விலை திட்டம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
International Women's Day: டாப் 5 வயர்லெஸ் இயர்போன்கள்! அன்புக்குரியவர்களுக்கு இதை பரிசளிங்க!