MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Bluetooth speaker: ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்கப் போறீங்களா? இந்த 7 விஷயங்களைத் தெரியாமல் வாங்காதீங்க!

Bluetooth speaker: ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்கப் போறீங்களா? இந்த 7 விஷயங்களைத் தெரியாமல் வாங்காதீங்க!

ஒரு சிறந்த ஸ்பீக்கரைத் தேர்வு செய்ய வாட் அளவுக்கு அப்பால் பேட்டரி பேக்கப், உண்மையான நீர் மற்றும் தூசி பாதுகாப்புக்கான ஐ.பி (IP) ரேட்டிங், நிலையான புளூடூத் இணைப்பு மற்றும் ஆடியோ கோடெக் ஆதரவு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.

4 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 02 2026, 07:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கரை தேர்வு செய்வது எப்படி?
Image Credit : Best Mivi soundbar

சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கரை தேர்வு செய்வது எப்படி?

வீட்டில், அலுவலகத்தில், பயணங்களில், சிறிய பார்ட்டிகளில் என பல இடங்களிலும் ப்ளூடூத் ஸ்பீக்கர் பயன்படுத்தப்படுகிறது. வயர் தேவையில்லை, மொபைலுடன் எளிதாக இணைத்துக்கொள்ளலாம் என்பதால் இதற்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.

ஆனால் சந்தையில் ரூ.500 முதல் பல ஆயிரம் ரூபாய் வரை ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் எதை வாங்குவது? அதிக விலை கொடுத்தால் தான் நல்ல ஸ்பீக்கர் கிடைக்குமா? அதிக வாட் இருந்தால் சத்தம் நன்றாக இருக்குமா? ஸ்பீக்கர் வாங்கும்போது இந்த 7 விஷயங்களை மட்டும் சரியாக கவனித்தால், தேவையில்லாமல் பணம் செலவு செய்வதைத் தவிர்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வாட் (Watt) மட்டும் பார்த்தால் போதாது
Image Credit : x

வாட் (Watt) மட்டும் பார்த்தால் போதாது

1. வாட் பார்த்து மட்டும் தேர்வு செய்யாதீர்கள்

ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்கும்போது பலரும் முதலில் பார்ப்பது Watt (W)அளவைத்தான். உதாரணமாக 10W ஸ்பீக்கர் -ஐவிட 20W ஸ்பீக்கர் அதிக சத்தம் கொடுக்கக்கூடும். ஆனால் வாட் அதிகம் இருந்தால் சவுண்ட் க்வாலிட்டி சிறப்பு என்று அர்த்தமில்லை. ஸ்பீக்கர் -ன் ஒலி தரத்தை அதன் டிரைவர், tuning, கேபினெட் டிசைன் மற்றும் distortion போன்ற பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன. அதனால், 40W ஸ்பீக்கர் அதனால் இது 20W ஸ்பீக்கர் -ஐவிட 2 மடங்கு நல்லது என்று முடிவு செய்வது சரியல்ல. வீட்டில் சாதாரணமாக கேட்பதற்கு 10W–20W அளவிலான ஸ்பீக்கர் போதுமானதாக இருக்கலாம். பெரிய அறை அல்லது வெளிப்புற பயன்பாட்டுக்கு அதைவிட அதிக அவுட்புட் தேவைப்படலாம்.

2. பேட்டரி பேக்கப்-ஐ கண்டிப்பாக பாருங்கள்

ப்ளூடூத் ஸ்பீக்கர்-ஐ வாங்கிவிட்டு அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியிருந்தால் அது எரிச்சலாகிவிடும். அதனால் நிறுவனங்கள் குறிப்பிடும் பேட்டரி ப்ளேபேக் நேரத்தை பாருங்கள். உதாரணமாக குறுகிய பயன்பாட்டுக்கு 5–6 மணி நேரம், தினசரி பயன்பாட்டுக்கு 8–12 மணி நேரம், Travel/Outdoor பயன்பாட்டுக்கு 15–20+ மணி நேரம். ஆனால் நிறுவனங்கள் குறிப்பிடும் பேட்டரி லைஃப் என்பது குறிப்பிட்ட சோதனை நிலைமைகளில் கிடைக்கும் மதிப்பாக இருக்கலாம். அதிக வால்யூம் ல் தொடர்ந்து பயன்படுத்தினால் பேட்டரி வேகமாக குறையலாம். ஸ்பீக்கர் வாங்கும்போது எவ்வளவு நேரம் சார்ஜ் ஆகும்? என்பதையும் எவ்வளவு நேரம் வேலை செய்யும்? என்பதையும் பாருங்கள்.

35
ப்ளூடூத் வெர்சன் vs ஆடியோ குவாலிட்டி
Image Credit : x

ப்ளூடூத் வெர்சன் vs ஆடியோ குவாலிட்டி

3. Waterproof-ஆ? Water-resistant-ஆ?

வாட்டர்ப்ரூப் ஸ்பீக்கர் என்று விளம்பரப்படுத்தப்படுவதைப் பார்த்தவுடன் எந்த ஸ்பீக்கர் -ஐயும் தண்ணீரில் போடலாம் என்று நினைக்காதீர்கள். ஸ்பீக்கரில் ஐ.பி ரேட்டிங் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். உதாரணமாக IP67 இதில் முதல் இலக்கம் 6- தூசி பாதுகாப்பு, 2வது இலக்கம் 7 - குறிப்பிட்ட சோதனை நிபந்தனைகளில் தண்ணீரில் தற்காலிகமாக மூழ்குவதற்கான பாதுகாப்பு, அதேபோல் IPX4, IPX5, IPX6 போன்ற மதிப்பீடுகளும் வெவ்வேறு அளவிலான நீர் பாதுகாப்பைக் குறிக்கின்றன. குளியலறை, ஸ்ம்மிங் பூல் அருகில் அல்லது மழைக்கால வெளிப்புற பயன்பாடு என்றால் ஐ.பி மதிப்பீடு கவனிப்பது மிகவும் முக்கியம். ஆனால் ஐ.பி. மதிப்பீடு இருப்பதால் ஸ்பீக்கர் -ஐ வேண்டுமென்றே தண்ணீரில் போடுவது பாதுகாப்பானது என்று அர்த்தமில்லை.

4. ப்ளூடூத் வெர்சன் மட்டும் பார்த்து ஏமாறாதீர்கள்

ப்ளூடூத் 5.0, 5.2, 5.3, 5.4 என்று புதிய version-கள் வருவதால், புதிய ப்ளூடூத் version என்றால் ஆடியோ க்வாலிட்டி கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ப்ளூடூத் வெர்சன் connectivity, பவர் efficiency மற்றும் சில தொழில்நுட்ப வசதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சவுண்ட் க்வாலிட்டி ப்ளூடூத் வெர்சன் மட்டும் தீர்மானிக்காது. ஸ்பீக்கர் எந்த ப்ளூடூத் codecs-ஐ ஆதரிக்கிறது, உங்க போன் என்ன codecs-ஐ ஆதரிக்கிறது, ஸ்பீக்கர்-ன் hardware மற்றும் டியூனிங் எப்படி இருக்கிறது என்பதும் முக்கியம். எனவே ப்ளூடூத் 5.x என்று மட்டும் பார்த்து ஸ்பீக்கர் வாங்க வேண்டாம்.

45
பாஸ் (Bass) நல்லா இருந்தா மட்டும் போதுமா?
Image Credit : ZEBRONICS

பாஸ் (Bass) நல்லா இருந்தா மட்டும் போதுமா?

5. பாஸ் மட்டும் நல்ல சவுண்ட் இல்ல

கடையில் ஸ்பீக்கர் -ஐ சோதனை செய்யும்போது பலரும் முதலில் Bass-ஐ கவனிப்பார்கள். பாஸ் செம்மையாக இருக்கிறது… நல்ல ஸ்பீக்கர். ஆனால் உண்மையான சவுண்ட் க்வாலிட்டிக்கு பாஸ் மட்டும் போதாது. Vocals தெளிவாக இருக்கிறதா? Music instruments தனித்தனியாக கேட்கிறதா? Volume அதிகரிக்கும்போது distortion வருகிறதா? பாஸ் அதிகமாக இருந்தாலும் பாடலின் குரல் தெளிவாக இல்லையென்றால் அந்த ஸ்பீக்கர் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். Music + Movies + YouTube + Podcasts என பல வகையில் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் Balanced Sound தரும் ஸ்பீக்கர் -ஐ தேர்வு செய்வது நல்லது.

6. USB-C, AUX போன்ற வசதிகள் உள்ளதா?

ஸ்பீக்கர் வாங்கும்போது wireless connectivity மட்டும் பார்க்காமல் Ports மற்றும் கூடுதல் வசதிகளையும் கவனியுங்கள். குறிப்பாக USB-C Charging, AUX Input, USB Audio/Playback, MicroSD Card Slot, Microphone/Hands-free Calling, Stereo Pairing, Multi- ஸ்பீக்கர் Connection போன்ற வசதிகள் சில மாடல்களில் கிடைக்கலாம். உதாரணமாக ப்ளூடூத் பிரச்சினை ஏற்பட்டால் AUX Input இருப்பது சிலருக்கு பயனுள்ளதாக இருக்கலாம். மேலும், USB-C charging இருப்பது தற்போதைய சாதனங்களுடன் charging வசதியை எளிதாக்கும்.

55
7. விலை மட்டும் பார்க்காமல் வாரண்டியையும் பாருங்க
Image Credit : ZEBRONICS

7. விலை மட்டும் பார்க்காமல் வாரண்டியையும் பாருங்க

ரூ.700 ஸ்பீக்கர் -க்கும் ரூ.7,000 ஸ்பீக்கர் -க்கும் பெரிய வித்தியாசம் இருக்கலாம். ஆனால் அதிக விலை என்றாலே அது உங்கள் தேவைக்கு சிறந்தது என்று சொல்ல முடியாது. முதலில் உங்களுக்கு ஸ்பீக்கர் எதற்காக வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். தனிப்பட்ட பயன்பாட்டுக்கு சிறிய, குறைந்த விலை ஸ்பீக்கர் போதுமானதாக இருக்கலாம். ஹாலுக்கு சிறந்த Sound Quality மற்றும் போதுமான Volume முக்கியம். பயணங்களுக்கு Battery + Durability + Water Resistance முக்கியம். பார்ட்டிகளுக்கு அதிக Sound Output + Battery + Bass முக்கியமாக இருக்கலாம். அதன்பிறகு Warranty, Service Centre மற்றும் Replacement Policy ஆகியவற்றையும் பாருங்கள்.

ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்கும்போது Watt மட்டும் பார்த்து முடிவு செய்வது மிகப்பெரிய தவறு. Sound Quality + Battery + IP Rating + Connectivity + Features + பயன்பாடு + Warranty ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பார்த்துதான் தேர்வு செய்ய வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் ஸ்பீக்கர் வாங்குபவராக இருந்தாலும், ரூ.5,000–ரூ.10,000 செலவு செய்பவராக இருந்தாலும் இந்த அடிப்படை விஷயங்களை கவனித்தால், உங்கள் தேவைக்கு பொருத்தமான ஸ்பீக்கர் -ஐ தேர்வு செய்ய முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
7,80,000 ஆண்டுகளுக்கு பிறகு மாறிய பூமியின் காந்த சக்தி: சாட்டிலைட்டுகளுக்கு பேராபத்து? நாசா சொல்லும் அதிர்ச்சி உண்மை!
Related Stories
Recommended image1
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image2
JioPC: பழைய லேப்டாப் தூக்கிப்போடாதீங்க... வெறும் ரூ.11-க்கு 8GB RAM, 500GB ஸ்டோரேஜ் சூப்பர் கம்ப்யூட்டர் தரும் ஜியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved