வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்.. க்ளிக் மட்டும் பண்ணாதீங்க.. மக்களே உஷார்.!
சமீபத்தில் பலர் லட்சக்கணக்கில் பணம் இழந்துள்ளனர். உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு வங்கி விவரங்கள் திருடப்படலாம். சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

வாட்ஸ்அப் மோசடி
சமீபத்தில் பலருக்கு வாட்ஸ்அப்பில் “RTO சலான்” அல்லது “PM கிசான்” என்ற பெயரில் மெசேஜ்கள் வருகின்றன. இதில் “உங்கள் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, உடனே சரிபார்க்கவும், இல்லையேல் எப்ஐஆர் பதிவு செய்யப்படும்” என தகவல் ஆகும். அந்த லிங்கை கிளிக் செய்தால், ஒரு APK கோப்பு (பைல்) பதிவிறக்கம் ஆகி, SMS, தொடர்புகள், அறிவிப்புகள் போன்ற அனுமதிகளைக் கேட்கும். இதனால் உங்கள் வங்கி OTP, மெசேஜ்கள் ஹேக்கர்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் பலர் லட்சக்கணக்கில் பணம் இழந்துள்ளனர்.
போன் ஹேக் எச்சரிக்கை
உங்கள் போன் அடிக்கடி ஹேங் ஆகும். போனை பயன்படுத்தினாலும் பேட்டரி வேகமாக குறைகிறது. தனிப்பட்ட தகவல்கள், மெசேஜ்கள் கசிந்து அல்லது மாற்றம் காணப்படுகிறது. உங்கள் பெயரில் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது.
உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
APK பதிவிறக்கம் செய்திருந்தால், உடனடியாக நீக்கவும். ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், அதை அன்இன்ஸ்டால் செய்யவும். உங்கள் வங்கி கடவுச்சொற்களை மாற்றி வைக்கவும். தெரியாத பரிவர்த்தனை நடந்தால், வங்கி மற்றும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யவும். மேலும், தேசிய சைபர் கிரைம் போர்ட்டலிலும் புகார் அளிக்கலாம்.
பாதுகாப்பு வழிமுறைகள்
எப்போதும் பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யவும். வாட்ஸ்அப்பில் வரும் APK லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். “தெரியாத ஆதாரங்கள்” ஆப்ஷனை ஆஃப் செய்யவும். ஆப் அனுமதிகளை (SMS, தொடர்புகள்) யோசித்து வழங்கவும். ATM பின் மற்றும் பாஸ்வேர்டுகளை போனில் சேமிக்க வேண்டாம்.