- Home
- டெக்னாலஜி
- Budget Phones 2025: கையில் காசு கம்மியா இருக்கா? கவலையே வேண்டாம்! ரூ.15,000-க்குள் கிடைக்கும் 5 'மாஸ்' போன்கள்!
Budget Phones 2025: கையில் காசு கம்மியா இருக்கா? கவலையே வேண்டாம்! ரூ.15,000-க்குள் கிடைக்கும் 5 'மாஸ்' போன்கள்!
Budget Phones 2025: 2025-ல் ரூ.15,000 விலைக்குள் வெளியான சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் எவை? ரெட்மி, விவோ, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் பெஸ்ட் பட்ஜெட் மொபைல் பட்டியல் இதோ.

Budget Phones 2025 2025-ன் பட்ஜெட் சாய்ஸ்: கம்மி விலை, கச்சிதமான வசதிகள்
ஸ்மார்ட்போன் சந்தையில் 2025-ம் ஆண்டு பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ரூ.15,000-க்கு குறைவான விலையில், 5G வசதி, சிறந்த கேமரா மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட பல மொபைல்கள் அறிமுகமாகின. அதிக காசு செலவழிக்காமல், லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் ஒரு போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்த ஆண்டு வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள் இதோ.
ரெட்மி நோட் 14 SE 5G (Redmi Note 14 SE 5G)
ரெட்மி என்றாலே பட்ஜெட் மொபைல்களின் ராஜா தான். ஜூலை மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.14,999-க்கு விற்பனைக்கு வந்தது. ஆனால், தற்போது ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் இதன் விலை ரூ.13,499 ஆகக் குறைந்துள்ளது. கையில் கச்சிதமாகப் பொருந்தும் டிசைனும், 5G வேகமும் இதன் முக்கிய சிறப்பம்சங்கள்.
விவோ T4x 5G (Vivo T4x 5G)
மார்ச் மாதம் அறிமுகமான விவோவின் இந்த மாடல், அதன் கேமரா மற்றும் டிசைனுக்காகவே பலரை ஈர்த்தது. இதன் 6GB மற்றும் 8GB வேரியண்ட்கள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.14,999 என்ற விலையில் களமிறங்கின. தற்போது சந்தை நிலவரப்படி விலையில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், ரூ.15,000 பட்ஜெட்டில் இது ஒரு சிறந்த தேர்வாகத் தொடர்கிறது.
ஒப்போ K13x 5G (Oppo K13x 5G)
ஜூன் மாதம் வெளியான ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போன், குறைந்த விலையில் பிரீமியம் லுக்கைத் தேடுபவர்களுக்கானது. இதன் 4GB ரேம் மாடல் வெறும் ரூ.11,999-க்கு அறிமுகமானது. தற்போது இதன் 6GB மற்றும் 8GB மாடல்கள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பட்ஜெட்டிற்கு ஏற்ற ஒரு ஆல்ரவுண்டர் இது.
ஐக்யூ Z10x 5G (iQOO Z10x 5G)
கேமிங் மற்றும் பெர்ஃபார்மன்ஸில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஐக்யூ ஒரு வரப்பிரசாதம். ஏப்ரல் மாதம் அறிமுகமான போது இதன் ஆரம்ப விலை ரூ.13,499 ஆக இருந்தது. தற்போது இதன் 6GB மாடல் ரூ.14,999-க்கும், 8GB மாடல் ரூ.16,499-க்கும் விற்கப்படுகிறது. வேகமான சார்ஜிங் மற்றும் சிறந்த ப்ராசஸர் இந்த போனின் பலம்.
இன்ஃபினிக்ஸ் நோட் 50x 5G (Infinix Note 50x 5G)
பட்ஜெட் விலையில் பெரிய ஸ்கிரீன் மற்றும் அதிக வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இன்ஃபினிக்ஸ் ஒரு நல்ல தேர்வு. மார்ச் மாதம் வெளியான இந்த போன், ரூ.11,499 என்ற மிகக் குறைந்த விலையில் அறிமுகமானது. தற்போது பிளிப்கார்ட்டில் இதன் 6GB ரேம் மாடல் ரூ.12,499-க்கும், 8GB மாடல் ரூ.13,999-க்கும் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

