ஆட்டோமேடிக் Geyser vs மேனுவல் Geyser: குளிருக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?
Geyser மேனுவல் கீஸர் (குறைந்த விலை) மற்றும் ஆட்டோமேடிக் கீஸர் (ஸ்மார்ட், மின் சேமிப்பு) ஒப்பீடு. உங்கள் வீட்டிற்கு சிறந்த வாட்டர் ஹீட்டரைத் தேர்வு செய்ய முழு வழிகாட்டி.

ஆட்டோமேடிக் Geyser vs மேனுவல் Geyser: குளிருக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?
குளிர்காலம் தொடங்கிவிட்டதால், சுடுநீரில் குளிப்பது அத்தியாவசியமாகிறது. இந்த நேரத்தில் பலரும் புதிய வாட்டர் ஹீட்டர் (Geyser) வாங்குவது பற்றி யோசிப்பார்கள். ஆனால், 'மேனுவல் (Manual) வாங்குவதா அல்லது ஆட்டோமேடிக் (Automatic) / ஸ்மார்ட் கீஸர் (Smart Geyser) வாங்குவதா?' என்ற கேள்வி பலருக்கும் வரும். இந்த இரண்டு வகைகளிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. உங்களின் தேவை மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்தே எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்தக் கட்டுரையில் அவற்றின் முழுமையான ஒப்பீட்டைப் பார்க்கலாம்.
மேனுவல் கீஸர்: மலிவானது, எளிதில் பழுதுபார்க்கலாம்
பாரம்பரியமான (Traditional) மேனுவல் கீஸர்கள், வெப்பநிலையைக் கட்டுப்படுத்த ஒரு எளிய குமிழ் அல்லது பட்டனைக் கொண்டிருக்கும். இவற்றின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அவற்றின் ஆரம்ப விலை மிகக் குறைவு (Affordable).
• குறைந்த செலவு: இதன் ஆரம்ப விலை குறைவாக இருப்பதால், பட்ஜெட் குறைவாக இருப்பவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ்.
மேனுவல் கீஸர்:
• எளிதான பழுது: இதில் குறைந்த எலெக்ட்ரானிக் பாகங்கள் மட்டுமே இருப்பதால், இவற்றைப் பழுதுபார்ப்பது எளிது மற்றும் செலவும் குறைவு. தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு.
தேவையான நேரத்தில் சுடுநீர் மட்டும் போதும், மேம்பட்ட அம்சங்கள் தேவையில்லை என்பவர்களுக்கு மேனுவல் கீஸர் போதுமானதாக இருக்கும்.
மேனுவல் கீஸரின் குறைகள்: அதிக மின்சார செலவு?
டிஜிட்டல் அல்லது ஆட்டோமேடிக் அம்சங்கள் இல்லாததால், இந்த மேனுவல் கீஸர்களில் சரியான வெப்பநிலை கட்டுப்பாட்டை அமைக்க முடியாது. மேலும், இன்சுலேஷன் சரியாக இல்லாத மாடல்களில், அவை அதிக மின்சாரத்தை உட்கொள்ளும் (Less Energy Efficient). இது காலப்போக்கில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளது.
ஆட்டோமேடிக் கீஸர்: ஸ்மார்ட் அம்சம், ஆற்றல் சேமிப்பு
தற்காலத்திய ஆட்டோமேடிக் கீஸர்கள், டிஜிட்டல் கட்டுப்பாடுகளை வழங்குகின்றன. நீங்கள் அமைக்கும் வெப்பநிலை வரம்பை அடைந்தவுடன், இவை தானாகவே நிறுத்தப்படும் (Auto Shut-off) அம்சத்தைக் கொண்டுள்ளன.
• ஸ்மார்ட் வசதிகள்: பல மாடல்களில் வைஃபை இணைப்பு, ஆப் மூலம் கட்டுப்படுத்தும் வசதி மற்றும் டைமர் செட் செய்யும் வசதி ஆகியவை உள்ளன. இதன் மூலம், நீங்கள் வீட்டில் இல்லாத போதும் தண்ணீரைச் சூடாக்க முடியும்.
• ஆற்றல் சேமிப்பு: இவற்றின் இன்சுலேஷன் பொதுவாக சிறப்பாக இருப்பதால், மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மேலும், சரியான, வசதியான வெப்பநிலையைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது
ஆட்டோமேடிக் கீஸரின் விலை மற்றும் பராமரிப்பு
ஆட்டோமேடிக் கீஸர்கள் அதிக அம்சங்களைக் கொண்டிருப்பதால், இது சற்று சிக்கலானதாகத் தோன்றலாம். இவற்றின் ஆரம்ப விலை அதிகம் மற்றும் மேம்பட்ட எலெக்ட்ரானிக்ஸ்களைப் பராமரிப்பதற்கான செலவும் அதிகமாக இருக்கும். நவீன வசதி, ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் நீண்ட கால மின் சேமிப்பை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும்.
உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்தது
• உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால் மற்றும் ஒரு தெர்மோஸ்டாட் கொண்ட நம்பகமான வாட்டர் ஹீட்டர் போதும் என்றால், ஒரு மேனுவல் கீஸரை (Manual Geyser) வாங்கலாம். ஆனால், அதை எச்சரிக்கையுடன் சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டியது அவசியம்.
• வசதி, ஆட்டோமேஷன் மற்றும் நீண்ட கால ஆற்றல் சேமிப்பை நீங்கள் விரும்பினால், ஆட்டோமேடிக் கீஸர் (Automatic Geyser) ஒரு சிறந்த நீண்ட கால முதலீடாக இருக்கும்.