MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 728 அடி அகலம், 141 அடி ஆழம்: நிலவில் சமீபத்தில் உருவான மெகா பள்ளம்; 100 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு - நாசா

728 அடி அகலம், 141 அடி ஆழம்: நிலவில் சமீபத்தில் உருவான மெகா பள்ளம்; 100 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு - நாசா

2024-ல் விண்வெளிப் பாறை ஒன்று நிலவில் மோதியதால் உருவான பிரம்மாண்டமான புதிய பள்ளத்தை நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது. ‘மெக்கெட்சின்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளம் 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்டது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 18 2026, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நிலவில் மெக்கெட்சின் எனும் புதிய பள்ளத்தைக் கண்டறிந்தது நாசா!
Image Credit : x

நிலவில் மெக்கெட்சின் எனும் புதிய பள்ளத்தைக் கண்டறிந்தது நாசா!

2024-ம் ஆண்டில் விண்வெளிப் பாறை ஒன்று மோதியதால் நிலவில் உருவான பிரமாண்டமான புதிய பள்ளத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) கண்டறிந்துள்ளது. சுமார் 728 அடி அகலம் கொண்ட இந்தப் பள்ளம், அண்மைக்காலத்தில் ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்திலேயே புதிதாக உருவான மிகப்பெரிய பள்ளமாகக் கருதப்படுகிறது. இதனை ஒரு நூற்றாண்டில் அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்தில் ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய கண்டுபிடிப்பு என நாசா வர்ணித்துள்ளது.

நிலவில் ஏற்கனவே பல பள்ளங்கள் உள்ளன; அவற்றில் பல ‘மெக்கெட்சின்’ பள்ளத்தை விடவும் பல மடங்கு பெரியவை. இருப்பினும், மிகச் சமீபத்தில் புதிதாக உருவான ஒரு பள்ளத்தை உடனுக்குடன் ஆராய்வது, நிலவின் புவியியல் மாற்றங்களை விஞ்ஞானிகள் மிக ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும்.குறிப்பாக, நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவும் சீனாவும் தீவிரமாகத் திட்டமிட்டு வரும் இச்சூழலில், அங்கு நிகழும் புதிய மோதல்கள் மற்றும் நிலப்பரப்பு மாற்றங்களைப் பற்றிய இந்த நேரடித் தரவுகள், எதிர்கால மனித விண்வெளிப் பயணங்களுக்குப் பெரும் பாதுகாப்பு வழிகாட்டலாக அமையும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது ஏன்?
Image Credit : x

நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது ஏன்?

நிலவில் ஏற்கனவே எண்ணற்ற பள்ளங்கள் இருக்கும்போது இதில் என்ன சிறப்பு என்ற கேள்வி எழலாம். ‘மெக்கெட்சின்’ (McGetchin) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளம், சக்திவாய்ந்த விண்கல் மோதலின் விளைவாக வெறும் 2 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் உருவானது என்பது தான் இதன் முக்கிய சிறப்பம்சம். அண்மைக் காலத்தில் ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்திலேயே செதுக்கப்பட்ட மிகப்பெரிய மோதல் பள்ளம் இதுவேயாகும்.

நாசாவின் கூற்றுப்படி, செங்குத்தான சுவர்களைக் கொண்ட இந்தப் பள்ளம் சுமார் 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு ரோமின் புகழ்பெற்ற 'கொலோசியம்' அரங்கத்தை விடப் பெரியது; 2 கால்பந்து மைதானங்களின் நீளத்திற்கு இணையானது.

34
நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது ஏன்? - 2
Image Credit : x

நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது ஏன்? - 2

இத்தகைய பிரமாண்ட மோதல் நிகழ்வு சுமார் 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 'சயின்ஸ் அட்வான்சஸ்' (Science Advances) இதழில் வெளியான ஆய்வறிக்கையில், சூரிய குடும்பத்தில் அண்மைக் காலத்தில் உருவான மிகப்பெரிய புதிய பள்ளம் இதுவென உறுதி செய்யப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டின் வசந்த காலத்தில், வால்நட்சத்திரம் அல்லது சிறுகோள் ஒன்று நிலவின் மீது மோதியதால் இது உருவானதாகக் கருதப்படுகிறது. நிலவில் மோதிய அந்த விண்பாறை சுமார் 3 முதல் 6 அடுக்குமாடி கட்டிடத்தின் அளவிற்கு இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த அளவிலான ஒரு மோதல் நிகழ்வு நிலவில் ஒரு நூற்றாண்டில் ஒருமுறை அல்லது அதற்கும் மேற்பட்ட கால இடைவெளியில்தான் நிகழும் என்று நாசா தனது வலைப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.

44
நிலவில் விழுந்த பள்ளத்தை கண்டறிய இவ்வளவு காலதாமதம் ஏன்?
Image Credit : x

நிலவில் விழுந்த பள்ளத்தை கண்டறிய இவ்வளவு காலதாமதம் ஏன்?

இந்தப் பள்ளம் உருவாகி பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், நாசாவின் லூனார் ரீகreconnaissance ஆர்பிட்டர் (LRO) திட்ட ஆராய்ச்சியாளரான ராபர்ட் வாக்னர் நிலவின் மேற்பரப்பை அண்மையில் ஆய்வு செய்தபோதே இது முதன்முறையாகக் கவனத்திற்கு வந்தது.

2009-ஆம் ஆண்டு முதல் நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துவரும் LRO விண்கலத்தின் பார்வையில், இந்தப் புதிய பள்ளமானது "கருமையான ஒளிவட்டத்தால் சூழப்பட்ட ஒரு பெரிய பிரகாசமான புள்ளி" போலத் தென்பட்டது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அறிவியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
100 ஆண்டுகளுக்குப் பின் பேரதிசயம்: பொலிவியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பூனை இனம்!
Recommended image2
5.1 வயர்லெஸ் 3D ஆடியோ, மிரட்டும் எஃபெக்ட்ஸ்: வீட்டை தியேட்டராக மாத்தும் டி.சி.எல் டால்பி அட்மாஸ் சவுண்ட்பார்!
Recommended image3
Car Maintenance: கார் வாங்கிய முதல் நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை என்னென்ன செலவு வரும்? முழு கணக்கு இதோ!
Related Stories
Recommended image1
100 ஆண்டுகளுக்குப் பின் பேரதிசயம்: பொலிவியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பூனை இனம்!
Recommended image2
உருகும் பனிப்பாறைகள், நகரும் மையம்: பூமியின் சமநிலை மாறுகிறதா? நாசா ஆய்வில் வெளியான அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved