Work from Home: வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்.. மொபைல் போன் மட்டும் இருந்தா போதும்!
Work from Home: கூடுதல் வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், அதற்காக பெரிய முதலீடோ அல்லது விலையுயர்ந்த சாதனங்களோ அவசியம் என்று நினைக்கத் தேவையில்லை. இணைய வசதியுடன் கூடிய ஒரு ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.

Work from Home
கொஞ்சம் ஸ்மார்ட்டா யோசிச்சா, உங்க மொபைல் போன் மூலமாவே நல்ல வருமானம் பார்க்கலாம். வேலைக்கு போறவங்க கூட, ஃப்ரீ டைம்ல சின்ன சின்ன வேலை செஞ்சு செலவுக்கு பணம் சம்பாதிக்கலாம். அதுக்கான ஐடியாக்களை இங்கே பார்க்கலாம்.
Mobile Income
டிஜிட்டல் டெம்ப்ளேட் விற்பனை: CapCut வீடியோ டெம்ப்ளேட்கள், Notion பேஜ்கள், இமோஜி பேக்ஸ் போன்ற டிஜிட்டல் தயாரிப்புகளை நீங்களே டிசைன் செஞ்சு விற்கலாம். இதுக்கு பேசிக் வீடியோ எடிட்டிங் தெரிஞ்சா போதும். சோஷியல் மீடியா டிரெண்ட்களை ஃபாலோ பண்ணா, இதுல நல்ல வருமானம் பார்க்கலாம்.
டெஸ்ட் பார்ட்டிசிபென்ட்: நிறுவனங்கள் புதுசா ஒரு பொருள் அல்லது சேவையை அறிமுகம் செய்யுறதுக்கு முன்னாடி, அதை மக்கள்கிட்ட கொடுத்து ஃபீட்பேக் கேட்பாங்க. உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இந்த மாதிரி சோதனைகள்ல கலந்துக்கிட்டு, உங்க கருத்தை சொல்லி பணம் சம்பாதிக்கலாம்.
ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும்.. அன்லிமிடெட் 5ஜி, 18+ OTT இலவசம்!
Make Money Online
ரெஃபர் & எர்ன் ஆப்ஸ்: நம்பகமான நிதி, ஷாப்பிங் ஆப்'களை டவுன்லோட் செஞ்சு அக்கவுன்ட் தொடங்குங்க. அதுல 'Refer & Earn' பகுதிக்கு போனா ஒரு லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை நண்பர்களுக்கு அனுப்புங்க. அவங்க அதை பயன்படுத்தி முதல் பரிவர்த்தனை செஞ்சா, உங்க அக்கவுன்ட்க்கு பணம் வரும்.
இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங்: போன்லயே எடிட்டிங் ஆப்'களை டவுன்லோட் பண்ணுங்க. மத்தவங்கள கவர மாதிரி ரீல்ஸ் பண்ணுங்க. ஃபாலோயர்ஸ் அதிகமானா, பிராண்ட் ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும். அவங்க பொருட்களை விளம்பரப்படுத்தி நல்லா சம்பாதிக்கலாம்.
Earn Money Online
ஆன்லைன் ஸ்டோர் தொடங்குங்கள்: சொந்தமா பிசினஸ் செய்யணும்னு ஐடியா இருந்தா, மொபைல்லயே ஒரு ஆன்லைன் கடையை திறக்கலாம். இ-காமர்ஸ் தளங்கள்ல உங்க பொருட்களின் போட்டோக்களை போட்டு, ஆர்டர் எடுத்து, பொருட்களை அனுப்புற வரை எல்லா வேலையையும் மொபைல்லயே செய்யலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

