MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Netflix Free: மீண்டும் 30 நாள் இலவச சலுகையை அறிவித்த நெட்பிளிக்ஸ்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விபரம்

Netflix Free: மீண்டும் 30 நாள் இலவச சலுகையை அறிவித்த நெட்பிளிக்ஸ்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விபரம்

Netflix Free: நெட்பிளிக்சில் 30 நாட்கள் இலவசமாக திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் பார்க்கலாம் என்றால் நம்புவீர்களா? சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு, இலவச சலுகையை நெட்பிளிக்ஸ் மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 12 2026, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நெட்பிளிக்ஸ் 30 நாள் இலவசம்
Image Credit : Instagram

நெட்பிளிக்ஸ் 30 நாள் இலவசம்

உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இலவச சோதனை சலுகையை வழங்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பயனர்களை ஈர்க்கும் வகையில், தகுதியுள்ள சில கணக்குகளுக்கு 15 நாள் அல்லது 30 நாள் இலவச சந்தா வழங்கப்படும் நிறுவனம் தனது உதவி மையத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. நெட்பிளிக்ஸ் பல ஆண்டுகளாக புதிய பயனர்களுக்கு 30 நாள் இலவச சோதனை காலத்தை வழங்கியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நெட்பிளிக்ஸ் இலவச சந்தா
Image Credit : Getty

நெட்பிளிக்ஸ் இலவச சந்தா

ஆனால் இந்த சலுகை உலகளவில் 2020-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நேரடியாக கட்டண சந்தா மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் சில நாடுகளில் இலவச சோதனை நடத்தப்படுவது பயனர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. நெட்பிளிக்சின் உதவி மையம் தகவலின்படி, புதிய கணக்கை உருவாக்கும் போது, ​​பயனரின் கணக்கு, சாதனம் மற்றும் இருப்பிடம் ஆகியவை தகுதியானதாக இருந்தால் மட்டுமே இலவச சோதனைச் சலுகை தானாகவே திரையில் தோன்றும்.

Related Articles

Related image1
Profit Raja Yoga: குரு, சுக்கிரன் சேர்க்கையால் லாப ராஜயோகம்! அதிக பலன் பெறும் 4 ராசிகள் யார்?
Related image2
AC Mistake: மழைக்காலத்தில் ஏசியை எந்த மோடில் பயன்படுத்த வேண்டும்? 99% பேருக்கு தெரியாத முக்கிய தகவல்!
34
நெட்பிளிக்ஸ் புதிய சலுகை
Image Credit : X

நெட்பிளிக்ஸ் புதிய சலுகை

அந்த ஆப்ஷன் காணப்படவில்லை என்றால், தற்போது அந்த கணக்கு இந்த சலுகைக்கு தகுதியற்றது என்பதே பொருள். இந்த இலவச சோதனை சலுகை எல்லா நாடுகளிலும் வழங்கப்படவில்லை. நெட்பிளிக்ஸ் இதுவரை இந்தியாவில் இந்த சலுகை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், அனைத்து பயனர்களுக்கும் ஒரே கால அளவு வழங்கப்படவில்லை. சிலருக்கு 30 நாள் இலவச சோதனை கிடைத்ததாகவும், மற்ற சிலருக்கு 15 நாள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
நெட்பிளிக்ஸ் அறிவிப்பு
Image Credit : Getty

நெட்பிளிக்ஸ் அறிவிப்பு

இதன் மூலம், நெட்பிளிக்ஸ் பல்வேறு பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி அதன் விளைவுகளை மதிப்பீடு செய்து வருவதாக தெரிகிறது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், புதிய சந்தாதாரர்களை அதிகரிப்பதாக இருக்கலாம். ஒரு மாத காலத்திற்கு நெட்பிளிக்ஸ்ன் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களை அனுபவித்த பிறகு, பலர் கட்டண சந்தாவிற்கு மாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்த சோதனை நடைபெறுவதாக வட்டாரங்கள் கருதுகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smartwatches Under 5,000: காலிங் முதல் ஆக்சிஜன் வரை.. ₹5,000 பட்ஜெட்டில் டாப் 5 வாட்ச்கள்!
Recommended image2
AC Mistake: மழைக்காலத்தில் ஏசியை எந்த மோடில் பயன்படுத்த வேண்டும்? 99% பேருக்கு தெரியாத முக்கிய தகவல்!
Recommended image3
Google Maps: போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ்ல் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
Related Stories
Recommended image1
Profit Raja Yoga: குரு, சுக்கிரன் சேர்க்கையால் லாப ராஜயோகம்! அதிக பலன் பெறும் 4 ராசிகள் யார்?
Recommended image2
AC Mistake: மழைக்காலத்தில் ஏசியை எந்த மோடில் பயன்படுத்த வேண்டும்? 99% பேருக்கு தெரியாத முக்கிய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved