- Home
- Tamil Nadu News
- அப்பாடா! வெயிலுக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட்! தமிழகம் முழுவதும் கனமழைக்கு நாள் குறித்த வானிலை மையம்!
அப்பாடா! வெயிலுக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட்! தமிழகம் முழுவதும் கனமழைக்கு நாள் குறித்த வானிலை மையம்!
தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததில் இருந்து கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சுட்டெரித்து வந்த வெயில்
தமிழகத்தில் பள்ளி திறப்பதற்கு முன்னதாக வெயில் குறைந்து பல மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறந்ததில் இருந்து வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. பல பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
இந்நிலையில் வங்கடலில் அடுத்த வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக என வானிமை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.