MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் சுய உதவிக்குழுவிற்கு இன்று அடிக்கப்போகுது ஜாக்பாட்.! வெளியாகப்போகும் குஷியான அறிவிப்பு

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு இன்று அடிக்கப்போகுது ஜாக்பாட்.! வெளியாகப்போகும் குஷியான அறிவிப்பு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருதுகள், வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் பரிசுத் தொகை வழங்கும் நிகழ்வு ஜூன் 11, 2025 அன்று சென்னையில் நடைபெறும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 11 2025, 09:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகளிர் சுய உதவிக்குழு திட்டங்கள்
Image Credit : our own

மகளிர் சுய உதவிக்குழு திட்டங்கள்

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு பல்வேறு உதவித்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவினை முன்னிட்டு, 11.06.2025 அன்று சென்னையில்  நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஊரகம் மற்றும் நகர்ப்புரங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், 

24
மகளிர் சுய உதவிக்குழு- வங்கிக் கடன் இணைப்புகள்
Image Credit : our own

மகளிர் சுய உதவிக்குழு- வங்கிக் கடன் இணைப்புகள்

வங்கிக் கடன் இணைப்புகள், மாநில அளவிலான பன்முகக் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், பரிசுத் தொகை போன்றவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

சுய உதவிக் குழு இயக்கம் பெற்றி வெற்றியின் காரணமாக பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடி மற்றும் முதன்மை திட்டமாக விளங்குகிறது. உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவித்திட கடந்த நான்காண்டுகளில் (2021 2025) 18,45,438 குழுக்களைச் சேர்ந்த 2,39,90,694 உறுப்பினர்களுக்கு 1.14,307.61 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
கடன் பெற விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர்.! புதிய அறிவிப்பால் அலறும் தமிழகம்
Related image2
10வது தேர்ச்சி அடையாவிட்டாலும் மலேசியாவில் வேலை.! கை நிறைய சம்பளம்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
34
சுய உதவிக்குழுவிற்கு வங்கிக் கடன் இணைப்புகள்
Image Credit : google

சுய உதவிக்குழுவிற்கு வங்கிக் கடன் இணைப்புகள்

சுய உதவிக் குழுக்களுக்கு 2025-2026ஆம் நிதியாண்டில் 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக 11.06.2025 அன்று மாநிலம் முழுவதும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. 

தொடர்ந்து மாநில அளவிலான பன்முகக் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்குகிறார்.

44
சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள்
Image Credit : our own

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள்

இந்நிகழ்வினைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரால் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்திடும் வகையில் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள 'மதி Logo' வெளியிடுவதுடன், சுய உதவிக் குழுக்களால் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள 'செக்கு கடலை எண்ணையும்' அறிமுகப்படுத்தவுள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை
பெண் அதிகாரம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
கடன் பெற விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர்.! புதிய அறிவிப்பால் அலறும் தமிழகம்
Recommended image2
10வது தேர்ச்சி அடையாவிட்டாலும் மலேசியாவில் வேலை.! கை நிறைய சம்பளம்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved