- Home
- Career
- 10வது தேர்ச்சி அடையாவிட்டாலும் மலேசியாவில் வேலை.! கை நிறைய சம்பளம்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
10வது தேர்ச்சி அடையாவிட்டாலும் மலேசியாவில் வேலை.! கை நிறைய சம்பளம்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மலேசியாவில் பல்வேறு பணியிடங்களை அறிவித்துள்ளது. QC Inspector, Engineer, Foreman, Welder போன்ற பணிகளுக்கு ரூ.38,000 முதல் ரூ.84,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் படித்த படிப்பிற்கும், அதிக சம்பளத்திற்காகவும் நாடு கடந்து செல்லும் நிலை உள்ளது. அப்படி வேலைக்காக செல்லும் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுவார்கள். ஆனால் தவறான நபர்களிடம் பணம் கட்டி ஏமாறும் நிலையும் உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி மலேசியாவில் பணிபுரிய QC INSPECTOR, PIPING ENGINEER, PLANNING ENGINEER. TENDERING ENGINEER, PIPING FOREMAN. PIPE FITTER மற்றும் TIG & ARC WELDER CS தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் பணிபுரிய வாய்ப்பு
மலேசியாவில் பணிபுரிய (Oil & Gas field) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E & BTECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 முதல் 42 வயதிற்கு உட்பட்ட QC Inspector (Cswip 3.1) பணிக்கு மாத வருமானம் ரூ. 70.00080.000/- Plping Engineer பணிக்கு ரூ.60,000-80,000/- Planning Engineer (Primavera P6) श्री ए5 70,000-84,000/- Tendering Engineer பணிக்கு ரூ.70,000 76,000/-Piping Foreman பணிக்கு ரூ.54,000-62400/-ஆகும் மற்றும் TIG & ARC Welders CS பணிக்கு மாத வருமானம் ரூ.42,000-50,000/-& Pipe Fitter பணிக்கு ரூ. 38,000-50,000/- ஊதியமாக வழங்கப்படும். உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
சேவைக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். இப்பணிகளுக்கான நேர்காணல் 18.06.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது எனவே விருப்பம் உள்ளவர்கள் (Resume Passport Original & Copy) Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42.
ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை
கிண்டி சென்னை -32
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.