கோயில்களில் மட்டுமல்ல பக்தி பாடல்களை கேட்டாலே சிலர் சாமியாடுவது ஏன்.? உடலில் ஏற்படும் மாற்றம் என்ன.?
தமிழக கோயில் திருவிழாக்களில் சாமியாட்டம் என்பது நெடுங்காலமாக நிலவும் ஒரு நடைமுறை. இந்த நிகழ்வின் போது மக்கள் தங்களை மறந்து ஆடி, அருள்வாக்கு கூறுவது வழக்கம். இது மரபும், நம்பிக்கையும் சார்ந்த ஒரு நிகழ்வாக இருப்பினும், மருத்துவ ரீதியாகவும் இதற்கு விளக்கம் உண்டு.
ஆன்மிகம்- மாணவிகளுக்கு வந்த சாமி அருள்
தமிழகத்தில் பல ஆயிரம் கோயில்கள் உள்ளன. இங்கு கோயில் திருவிழாவின் போது பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் சாமியாடுவர்கள். அப்போது அவர்கள் மீது வந்திறங்கிய அம்மன், அருள்வாக்கு கூறுவார்கள். இந்த சம்பவம் பல ஆண்டுகளாக நடைபெறும் சம்பவம். ஆனால் புத்தக திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமியாடி நிகழ்வுகள் தற்போது தமிழகம் முழுவதும் ஹாட் டாபிக். அந்த வகையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் புத்திக வெளியீட்டு விழா, கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக புத்தக வெளியீட்டு விழாவின் போது நாட்டுப்புற கலைஞர்கள் பாடலை பாடினார்கள்.
கருப்பசாமி பாடல்
அப்போது மிகவும் பிரபலமான அங்கே இடி முழங்குது, கருப்பசாமி பாடலை அந்த உடையோடு நாட்டுப்புற கலைஞர் ஆடிக்கோண்டிருந்தார். இதனை பார்த்துக்கொண்டிருந்த மாணவிகளில் சிலர் சாமி வந்து ஆடத்தொடங்கினர். இதனால் அருகில் இருந்த மாணவிகள் பதற்றம் அடைந்த நிலையில் சக மாணவிகள் சாமி அருள் வந்த மாணவியை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பின்பு சகஜ நிலை திரும்பியது.
.
கோயில் திருவிழாக்கள்
இந்தநிலையில் சாமி வந்து ஆடுவது ஏன்.? தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் ஆன்மிகம் சார்ந்த பகுதியாக உள்ளது. லட்சக்கணக்கான கிராமங்களை கொண்ட தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் குல தெய்வமாக சாமியை வழிபடுவார்கள். பல ஊர்களில் கோயில் திருவிழாவிற்கு முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்து திருவிழாவை கொண்டாடி முடிப்பார்கள். அந்த வகையில் காளியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன்,
அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், எட்டுகை அம்மன், அரியநாச்சியார், சந்தனமாரியம்மன் என ஆயிரக்கணக்கான பெண் குல தெய்வமும், கருப்பண்ண சாமி, கொல்லிமலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு,
குல தெய்வ வழிபாடு
இரட்டைமலை கருப்பு, ஒன்டி கருப்பு, சங்கிலி கருப்பு, முத்து கருப்பண்ண சாமி, வேம்பழ முத்து கருப்பண்ண சுவாமி, கறுப்பண்ணா, கீழேரி கருப்பு, உதிர கருப்பு, சமயக்கருப்பசாமி, கருப்பு, தலைவாயில் கருப்பசாமி,கழுவடியான், இருளப்பச்சாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன் என ஆயிரக்கணக்கான ஆண் குல தெய்வங்களும் உண்டு. இந்த கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது பெண்கள் சாமிவந்து ஆடுவார்கள்.
குறிப்பாக திருவிழாக்களில் பொதுவாக பால் குடம் எடுப்பது, தீச்சட்டி எடுப்பது ஆகிய நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இருக்கும். இந்த நிகழ்வுகளிலும் சாமி வந்து அதிகமானோர் ஆடுவார்கள். அப்போது சாதரணமாக இருப்பவர்கள் உறுமி மேளம், கொட்டு அடிக்க தொடங்கியதும் சாமி அருள் வர தொடங்கிவிடும். அப்போது ஊரில் நடைபெறும் நல்லது கெட்டது என அருள் வாக்கு கூறுவார்கள். இந்த அருள் வாக்கும் அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் கூறுவது என்ன.?
இந்தநிலையில் சாமி அருள் வந்து ஆடுவது எப்படி, சாதாரணமாக அமைதியாக இருப்பவர் திடீரென விஷ்வரூபம் எடுப்பது எப்படி என மருத்துவர்கள் கூறும்போது, ஒரு சிறு குழந்தை கூட அதன் முன்னால் ஒரு டப்பாவில் குச்சியை வைத்து அடித்தால் கூட அந்த சத்தத்தை கேட்டு மகிழ்ச்சியில் ஆடும். இப்படிப்பட்ட நிலையில் சாமி பக்தி அதிகம் கொண்டவர்கள் மேள தாள முழக்கத்தால் தன்னை அறியாமல் வரும் உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடு தான் சாமி ஆட்டம். கண்ணை மூடிய நிலையில் அதீத கற்பனை மற்றும் அதீத கடவுள் நம்பிக்கையின் வெளிப்பாடு தான் சாமி ஆடுதல் நிகழ்வாகும். இது போன்ற சாமி ஆடுதல் மத்தளம், உறுமி உடுக்கை இந்த மாதிரி ஒலி ஏற்படுத்தும் இடங்களில் மட்டுமே ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.
ஆட்டோ ஹிப்னாசிஸ் பாதிப்பு
இதே போல ஆன்மிக பாடல்களில் வரும் மேளதாளங்களை கேட்டாலும் ஒரு சிலருக்கு சாமி அருள் வரும். மேலும் இது போன்ற நிகழ்வு மருத்து குறைபாடாகும். ஆனால் நமது கலாச்சாரத்தில் இது ஆரம்பத்தில் இருந்து இருப்பதால் யாரும் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. சாமியாடிய போது என்னென்ன செய்தீர்கள், மற்றவர்கள் பேசியது நினைவிருக்கிறதா என கேட்டால் எதுவும் ஞாபகம் இருக்காது. Dissociative trance disorder அல்லது ஆட்டோ ஹிப்னாசிஸ் எனும் மன நோய் வகையைச் சேர்ந்தது என்கின்றனர். சாமி தன் உடலில் புகுந்து மக்களுக்கு அருள் புரிவதாகவும் , கடவுள் தன்னுடன் பேசுவதாகவும் , தனக்குத் தானே ஆழ்ந்த நம்பிக்கை உருவாக்கிக் கொள்கிறார்கள்,
brain health
உடலில் ஏற்படும் மாற்றங்கள்
இதன் காரணமாகவே சாமி அருள் வந்ததாக சாமி ஆடுகிறார்கள். வெளி மனதில் வாழ்பவர் தன் சுய நினைவு இழந்து உள் உணர்வு நிலைக்கு உடையவராகத் தள்ளப்படுகிறார். இந்த சாமியாடும் நிகழ்வு வாரிசு, வாரிசாக வருகிறது. மேலும் இது போன்ற சாமி ஆடுபவர்கள் தனிமையில் அதிகமாக சிந்திப்பவர்கள்,பெற்றோர்கள் துணையின்றி வளர்தல் போன்ற சூழ்நிலைகள் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.