- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணிநேரம்! இதோ முழு விவரம்!
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணிநேரம்! இதோ முழு விவரம்!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழகத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் அல்லது வேறு ஏதாவது பணிகளின் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்று தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
மின்தடை ஏற்படும் நேரம்
திருவண்ணாமலை மாவட்டம்
வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வடஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ் நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல், தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மின்தடை
திண்டுக்கல் மாவட்டம்
செங்குறிச்சி பகுதியில் ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, சிலுவத்தூர், வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை.
திருப்பூரில் 9 மணி முதல் மாலை 4 மணி வரை
திருப்பூர் மாவட்டம்
அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் ரோடு, வ.உ.சி. காலனி, அவினாசி கைகாட்டிபுதூர், சக்தி நகர், ராயம்பாளையம், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
திருவாரூர்பகுதியில் மின்தடை
திருவாரூர் மாவட்டம்
ஆலங்கோட்டை, கண்டிதம்பேட்டை, கீழத்திருப்பாலக்குடி, பைங்கநாடு, மேலமரவகாடு, அசேசம், பரவகோட்டை, இஞ்சிக்குடி, பூந்தோட்டம், கம்பூர், புலிவலம், பரவக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை. கூடூர், நாரணமங்கலம், மாங்குடி, CWSS திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம்
திருத்தணி
அக்கைய்யாநாயுடு சாலை, வாட்டர் டேங்க், முஸ்லிம் தெரு, ம.பொ.சி.சாலை, கடப்பாடிரங்க் ரோடு, ஸ்டிவார்பேட்டை முதல் மற்றும் இரண்டாவது தெரு, எம்.ஜி.ஆர்.தெரு, ஆலமரம் தெரு, கே.சி.செட்டி தெரு, கந்தப்பன் நாயக்கர் தெரு, கந்தசாமி தெரு மற்றும் ஆஸ்பிட்டல் தெரு சந்து உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் பாதையில் சாலை விரிவாக்க பணிகள்
நெல்லை மாவட்டம்
சமாதானபுரம் துணை மின் நிலையம், முருகன்குறிச்சி மின் பாதையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் பாளை மகளிர் காவல் நிலையம் முதல் முருகன்குறிச்சி சிக்னல் வரை, திருச்செந்தூர் சாலை பாளை மார்க்கெட், மூளிகுளம், தெற்குபஜார் கோபாலசாமி கோவில் பகுதிகள், சிவன் கோவில் பகுதிகள், ஆயிரத்தம்மன் கோவில் பகுதிகள், சங்கிலி ஆண்டவர் கோவில் பகுதிகள், பட்டு பிள்ளையார் கோவில் பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.