இனி மின்தடையே இருக்கக் கூடாது.! மின்வாரிய அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
கோடை வெயிலின் தாக்கத்தால் அதிகரித்து வரும் மின் நுகர்வால் மருத்துவமனைகளில் ஏற்படும் மின்தடையைத் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கவும், பழுது ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

power cut
Summer power cuts : கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் 24 மணி நேரமும் ஏசி இயக்கப்பட்டு வருகிறு. இதனால் அதிகளவு மின்பயன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் திடீர் மின் தடை ஏற்படுகிறது.
அந்த வகையில் மருத்துவமனையில் திடீர் மின் தடையால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. குறிப்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் , சென்னை வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் மின்தடை ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Summer power cuts
அதிகரிக்கும் மின்சார தேவை
அந்த வகையில் மருத்துவ கல்லூரிகள் , மாவட்ட மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்வெட்டு ஏற்படாத வகையில் சீரான மின்சார வினியோகம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடைகாலத்தில் தமிழகத்தின் அதிகபட்ச மின் நுகர்வு 20,830 மெகா வாட்டாக கடந்தாண்டு பதிவாகி இருந்தது ,
இந்தாண்டு மே மாதத்தில் 22 ஆயிரம் மெகாவாட் என்ற புதிய உச்சநிலையை அடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் மருத்துவமனைகளில் தடையின்றி என்ன மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட மின்வாரிய பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Power Cut In Hospital
மருத்துவமனையில் தடையில்லா மின்சாரம்
மேலும் மின்வாரியம் , பொதுப்பணித்துறை , மருத்துவத்துறை அதிகாரிகள், ஊழியர்களை ஒருங்கிணைத்து சீரான மின்சார விநியோகத்தை மின்வாரிய அதிகாரிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவமனை பகுதிகளில் மின்மாற்றி பழுது காரணமாக மின்தடை ஏற்படுவதை தடுக்க அதிக மின் தேவை உள்ள பகுதிகளில் தேவையின் அடிப்படையில் புதிய மின்மாற்றிகளை பொருத்து மாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hospital power outage
ஜெனரேட்டர் மூலம் மின்சாரம்
அதே நேரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிப்பதோடு பொதுப்பணித்துறை ஊழியர்கள் உதவியோடு ஜெனரேட்டர் மூலமாக சீரான மின்சாரத்தை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மற்ற துறை அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து செயல்படவும் மின்வாரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.