தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க?
கோடை வெயிலின் காரணமாக அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க, தமிழகத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில்
Power Outage in Tamil Nadu: தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி சுட்டெரிக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டில் பேன் மற்றும் ஏசி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை எட்டி வருகிறது. அப்படி இருந்த போதிலும் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
மின்தடை
இந்நிலையில் மாதம் தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியம்
மாணவர்களின் பொதுத்தேர்வு
கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை மாணவர்களின் பொதுத்தேர்வு காரணமான மின்தடை செய்யப்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற அறிவிப்பை மின்சார வாரியம் வௌியிட்டுள்ளது.
சோத்துபெரும்பேடு:
எந்தெந்த பகுதியில் மின்தடை
குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
எண்ணூர்:
5 மணிநேரம் மின்தடை
கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்.நகர், வ.உ.சி.நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம், தாழங்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எர்ணாவூர்குப்பம், இடிபிஎஸ் வாரிய குடி இருப்பு பகுத்தி, எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் சப்ளை மீண்டும் வழங்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.