தக்காளி, வெங்காயம் விலை இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுக்குமா.? ஒரு கிலோ இவ்வளவா.?
தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. சமீபத்தில் விலை உயர்ந்த தக்காளி, வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்துள்ளது.

தக்காளி வெங்காயம் விலை என்ன.?
சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காய்கறிகளாகும், அந்த வகையில், ரசம், சாம்பார் முதல் பிரியாணி சமைப்பதற்கு தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை அதிகமாகும், எனவே காய்கறி சந்தையில் மற்ற காய்கறிகளை விட இந்த தக்காளி, வெங்காயத்தை மட்டுமே மக்கள் அதிகளவில் வாங்கி செல்வார்கள்.
இதன் காரணமாகவே மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளியும் காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை போட்டி போட்டி உயர்ந்தது. ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாயை எட்டியது.
சரிவை சந்தித்த தக்காளி விலை
இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்த நிலையில் எப்போது தக்காளி, வெங்காயம் விலையும் என காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல எப்படி வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டி விலை உயர்ந்ததோ அதே போல தக்காளி வெங்காயத்தின் விலை சரிய தொடங்கியது. ஒரு கட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ 5 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே அழுகவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தக்காளியின் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக விலையானது உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் மழையின் தாக்கத்தை பொறுத்து விலை மேலும் உயரும் என கூறப்படுகிறது.
கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 விற்பனை செய்யப்பட்டு வருகிறது