- Home
- Tamil Nadu News
- Tomato Price Today : தக்காளி விலை இன்று கூடியதா?குறைந்ததா.?கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன தெரியுமா.?
Tomato Price Today : தக்காளி விலை இன்று கூடியதா?குறைந்ததா.?கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன தெரியுமா.?
தக்காளி விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ 40 ரூபாய் என்ற விலையில் தக்காளி சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

உச்சத்தை தொட்ட தக்காளி விலை
தக்காளி விலை கடந்த மாதம் உச்சத்தை தொட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 200 என்ற அளவில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் தக்காளியை வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறினர். மேலும் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளி தொடர்பான உணவுகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு போன்ற உணவுகள் தயாரிப்பது நிறுத்தப்பட்டது. மேலும் கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் தக்காளியை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
Tomato price hike
விவசாயிகள் மகிழ்ச்சி
அதே நேரத்தில் தாக்காளி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் தக்காளி பயிர் செய்து கோடீஸ்வரராக மாறியதாகவும் செய்திகள் வெளியானது.தக்காளி விலை திடீர் அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் தக்காளியை குப்பைகளில் கொட்ட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதன் காரணமாகவே விவசாயிகள் மாற்று பயிருக்கு மாறியது முக்கிய காரணமாகவே கூறப்பட்டது. மேலும் பருவ தவறிய மழையும் தக்காளி பயிரை நாசம் செய்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் தக்காளி விலை உச்சத்தை தொட்டதாக வியாபாரிகள் கூறினர்.
குறைய தொடங்கிய தக்காளி விலை
இதனையடுத்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைக்க நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. வெளி சந்தையில் 180 முதல் 200 வரை விற்ற நேரத்தில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஓரளவு விலை கட்டுப்படுத்தப்பட்டது.
இருந்த போதும் பெரும்பாலான மக்கள் வெளி சந்தையில் தக்காளி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை ஒரு நாளுக்கு 1000 முதல் 1100 டன் தக்காளி வரத்து வந்தது. ஆனால் கடந்த மாதம் 300 முதல் 450 டன் வரை மட்டுமே தக்காளி வந்தது. இதனால் விலை அதிகரித்ததாக கூறப்பட்டது.
ஒரு கிலோ தக்காளி விலை என்ன.?
இந்தநிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 200 ரூபாயை தொட்ட தக்காளி விலை தற்போது 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன் தின்ம 30 ரூபாய்க்கு குறைந்து இன்று மீண்டும் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் வெளி சந்தையில் 50 முதல் 60 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
சந்திரயான் செய்தி சேகரிக்க சென்ற பிரபல தொலைக்காட்சி கேமராமேன்..! விபத்தில் சிக்கி பலியான சோகம்