சந்திரயான் செய்தி சேகரிக்க சென்ற பிரபல தொலைக்காட்சி கேமராமேன்..! விபத்தில் சிக்கி பலியான சோகம்

சந்திரயான் விண்கலம் நேற்று நிலவில் தரை இறங்கிய நிகழ்வு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி நெல்லை கேமராமேன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

A private TV cameraman who went to collect news about Chandrayaan near Nella died in an accident

சந்திரியான் - விபத்தில் சிக்கி மரணம்

சந்திரயான் விண்கலம் நேற்று மாலை நிலவில் தரையிரங்கியது. இதற்காக அனைத்து தொலைக்காட்சிகளும் சிறப்பு நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதன் படி புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கரும் அவருடன் செய்தியாளர் நாகராஜூம் திருவனந்தபுரத்திற்கு காரில் சென்றுள்ளனர். நேற்று மாலை சந்திரியான் தொடர்பான நேரலையை முடித்துவிட்டு வாகனத்தில் நெல்லையை நோக்கி திரும்பி வந்துள்ளனர். வாகனத்தை ஒளிப்பதிவாளர் சங்கரே ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாதார விதமாக  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார் விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்துள்ளார்.

A private TV cameraman who went to collect news about Chandrayaan near Nella died in an accident

ஒளிப்பதிவாளர் மரணம்

செய்தியாளர் நாகராஜ் மற்றும் மற்றொரு தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். செய்தி சேகரிக்க சென்ற ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மரணம் அடைந்த ஒளிப்பதிவாளர் சங்கருக்கு மனைவி மற்றும் 5 வயதில் மகன் உள்ளான். நேற்று தனது மகன் பிறந்தாள் விழாவில் பங்கேற்க ஒளிப்பதிவாளர் சங்கர் ஆர்வமாக வீட்டிற்கு திரும்பிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

என்னையே பிடிக்க வரியா! கத்தியுடன் துரத்திய கஞ்சா கும்பல்! கத்தியபடி ஓடிய காவலர்.! வைரல் வீடியோ.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios