MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காலியாகும் நாம் தமிழர் கட்சி கூடாரம்.! அடுத்தடுத்து தெரித்து ஓடும் முக்கிய தலைவர்கள்- காரணம் என்ன.?

காலியாகும் நாம் தமிழர் கட்சி கூடாரம்.! அடுத்தடுத்து தெரித்து ஓடும் முக்கிய தலைவர்கள்- காரணம் என்ன.?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை பலர் விலகி வருகின்றனர். சீமான் நிர்வாகிகளை மதிப்பதில்லை எனவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கட்சியில் தொடர்ந்து நிர்வாகிகள் விலகுவது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Oct 08 2024, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சீமானும் நாம் தமிழர் தம்பிகளும்

தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக இளைஞர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி நாம் தமிழர் கட்சியாகும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சால் லட்சக்கணக்கான இளைஞர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தனித்து தேர்தலை எதிர்கொண்டாலும்  குறைந்தது 8 சதவிகிதம் முதல் 10 சதவிகித வாக்குகளை பெற்று வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் சீமானின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் பின் ஒருவராக மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை விலகி வருகின்றனர். மேலும் சீமான் நிர்வாகிகளை  மதிப்பது இல்லையெனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
seeman

seeman

அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்

கடந்த வாரம் கிருஷ்ணகிரி  மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன்.

2016 இல் முதன்முதலாக ஒரத்தூர் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் 2019 இல் விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் 2021 விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ஆகவும் 2024 விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும் என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராகவும் இருந்தோம். .

34

தேர்தல் பணிகள்- மாவட்ட செயலாளர் விளக்கம்

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். இதில் உள்ளாட்சி தேர்தலைத் தவிர்த்து வேறு எந்த வேட்பாளருமே எங்கள் மாவட்டமோ எங்கள் தொகுதியோ சார்ந்தவர் கிடையாது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட நான்கு மாவட்ட கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் 75% வேட்பாளரை நிரப்பினோம்.

கட்சியின் அனைத்து ஒன்றிய பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம். இது நாள் வரை நாம் செய்த செயல்கள். உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை, இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம்.

44
seeman

seeman

எந்த கேள்வியும் கேட்க கூடாது

அண்ணன் கூறியது : இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூட கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என சீமான் கூறினார். இது தொடர்பாக பலமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறினார். இந்த நிலையில் தான் 2026ஆம் சட்டமன்ற  தேர்தலுக்கு இப்பொழுதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன ?

அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன் என தெரிவித்துள்ளார். 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சீமான்
அரசியல்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved