- Home
- Tamil Nadu News
- தவெக ஆட்சி அமைந்தால் இவர்கள் எல்லாம் அமைச்சர்கள்.. விஜய்க்கு எந்த துறை.. லீக்கானது லிஸ்ட்..!
தவெக ஆட்சி அமைந்தால் இவர்கள் எல்லாம் அமைச்சர்கள்.. விஜய்க்கு எந்த துறை.. லீக்கானது லிஸ்ட்..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இது யாருக்கு சாதகமாக இருக்கும் என திமுக, அதிமுக கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன. இதனிடையே, விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தால் யார் அமைச்சர்களாக இருப்பார்கள் என்ற ஒரு உத்தேச பட்டியல்.

வரலாறு படைத்த தமிழகம்
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு அமைதியான முறையில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றி இதுவரை இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 5.73 கோடி மொத்த வாக்காளர்களில் 85 சதவீதம் அதாவது 4.82 கோடி வாக்களித்துள்ளனர்.
திமுக, அதிமுக தீவிர ஆலோசனை
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த 4.62 கோடி பேருடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 20 லட்சம் பேர் அதாவது 5 சதவீதம் பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர். இது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது தொடர்பாக திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்த கட்சிக்கு சாதகம்
பதிவான வாக்குகள் எண்ணிக்கை பெரிதாக மாறாமல், சதவீதம் மட்டும் உயர்ந்திருப்பது ஆளும் திமுக கூட்டணிக்கு ஒரு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டங்களால் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் மீண்டும் திராவிட மாடல் 2.0 அமையும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சியான அதிமுக ஆளும் திமுக மீதான அதிருப்தியின் காரணமாக வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதால் 200 தொகுதிகளில் வெற்றி உறுதி என அதிமுகவின் கூறி வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய்
இந்த தேர்தலை பொறுத்த வரையில் தவெக தலைவர் விஜய் அரசியல் வருகை தான் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. எந்த மாதிரியாக தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார். 12.5 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் எங்கே சென்றுள்ளன என்பதுதான் இந்த தேர்தலில் புரியாத புதிராக உள்ளது. மேலும் தவெக தலைவர் விஜய் அதிமுக அல்லது திமுக ஓட்டை பிரிக்க போகிறாரா என்பது தான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமைச்சரவை லிஸ்ட்
இதனிடையே ஒருவேளை விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தால் யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படும்? யாரெல்லாம் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்ற பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விஜய்- முதல்வர், உள்துறை, மக்கள் நலன், குழந்தைகள் மேம்பாடு, செங்கோட்டையன் - பொதுப்பணித்துறை (நீர்வளம்), ஆதவ் அர்ஜுனா - செய்தி, விளம்பரம் மற்றும் சுற்றுலாத் துறை, என். ஆனந்த் - போக்குவரத்துத் துறை, வெங்கட் ரமணன் - நிதித்துறை, அருண்ராஜ் - உணவுத் துறை, நிர்மல்குமார் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பிரபு- பால் வளர்ச்சி துறை, மரியம் வில்சன் - உயர்கல்வி துறை, சத்தியபாமா - வேளாண்மைத்துறை, லெப்ட் பாண்டி - சட்டத்துறை, பார்த்திபன் - தொழில்துறை, லோகேஷ் - அறநிலையத்துறை, ஜெகநாத் மிஸ்ரா - சமூகநீதித்துறை உள்ளிட்டோர் கொண்ட பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்சன்கள் இதுதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியவில்லையா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
