- Home
- Tamil Nadu News
- கரூரில் இருந்து விஜய்யை வெளியேறச் சொன்னதே காவல் துறை தான் - நீதிமன்றத்தில் பகீர் கிளப்பிய தவெக
கரூரில் இருந்து விஜய்யை வெளியேறச் சொன்னதே காவல் துறை தான் - நீதிமன்றத்தில் பகீர் கிளப்பிய தவெக
கரூரில் அசம்பாவிதம் ஏற்பட்ட பகுதியில் இருந்து விஜய்யை வெளியேறச் சொன்னதே காவல்துறை அதிகாரிகள் தான் என தமிழக வெற்றி கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தவெக
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகள் உட்பட 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையின் போது தவெக தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகளுக்கு எதிராகவும் தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
விஜய்யை புறப்படச் சொன்னதே காவல் துறை தான்..
கரூரில் அசம்பாவிதம் நடைபெற்ற பின்னர் விஜய் மேலும் அங்கு இருக்க வேண்டாம் என காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்தே விஜய் அங்கிருந்து புறப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களையும் தவெக.வினர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால் முறையான விசாரணை வேண்டும் என தவெக தரப்பில் நீதிபதி முன்பாக வாதிடப்பட்டது.
சிபிஐ விசாரணை கோரும் TVK
மேலும் நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவை எதிர்க்கவில்லை. ஆனால் அந்த குழுவில் மாநில அரசு அதிகாரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை எந்த தரப்பையும் சாராத விசாரணை வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவர முடியும். ஆகவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றமே அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை கண்டித்த உச்சநீதிமன்றம்
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் தவெக தலைவர் விஜய் சம்பவம் நடைபெற்றவுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். தற்போது வரை அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்றனர். இதனால் கோபமடைந்த நீதிபதி இது தற்போது தேவையில்லைாத வாதம். இப்பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை நடைபெறும் பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கில் தாமாக குறுக்கிட்டது ஏன்? ஒரே வழக்கில் எப்படி இரு நீதிமன்றம் கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறி விசாரணையை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்துள்ளார்.