- Home
- Tamil Nadu News
- ஓட்டு வாங்கி ஏமாற்றி இருக்கு திமுக..!கேள்வி கேட்காமல் விடமாட்டேன்.. விஜய் மீண்டும் ஆவேசம்
ஓட்டு வாங்கி ஏமாற்றி இருக்கு திமுக..!கேள்வி கேட்காமல் விடமாட்டேன்.. விஜய் மீண்டும் ஆவேசம்
திமுக மக்களிடம் ஓட்டு வாங்கி ஏமாற்றி விட்டதாக தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
12

Image Credit : Asianet News
மக்களை சந்தித்த விஜய்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்தித்தார். சுமார் 2,000 பேர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்து விஜய் பேசுகிறார். விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் குறைகளை விஜய் கேட்டறிகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வந்தார்.
22
Image Credit : Asianet News
மக்களை ஏமாற்றிய விஜய்
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், ''தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்த வன்மமும் இல்லை. மக்களிடம் பொய் சொல்லி விட்டு ஓட்டு வாங்கி விட்டு ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றியது திமுக. தவெகவுக்கு கொள்கையில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மக்களிடம் செல் என்ற அண்ணாவின் கொள்கையை மறந்தது யார்? திமுகவின் கொள்கையே கொள்ளை தான்'' என்று காட்டமாக விமர்சித்தார்.
Latest Videos

