MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Candidates: அமைச்சரை வீழ்த்திய விஜயின் நண்பர்.. செங்கோட்டையன் முதல் விஜய் தாமு வரை.. வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் லிஸ்ட்!

TVK Candidates: அமைச்சரை வீழ்த்திய விஜயின் நண்பர்.. செங்கோட்டையன் முதல் விஜய் தாமு வரை.. வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் லிஸ்ட்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில், தூத்துக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத், திமுக அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். பல தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்று, கட்சிக்கு பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : May 04 2026, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும், பிறகு மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன், தவெக சார்பில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், அதிமுக வேட்பாளர் செல்லபாண்டியன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

இந்நிலையில் ஆரம்பம் முதலே அமைச்சர் கீதா ஜீவன் பின்னுக்கு தள்ளி நடிகர் ஸ்ரீநாத் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் 10 சுற்று எண்ணிக்கையில் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீநாத் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்த ஸ்ரீநாத்தின் வெற்றி, தவெகவினரிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

34
Image Credit : Google

அதேபோல் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் செங்கோட்டையன் 60,000 அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். திமுக தரப்பில் போட்டியிட்ட நல்லசிவம் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த வெற்றியை அடுத்து 10வது முறையாக எம்எல்ஏ ஆனார்.

44
Image Credit : Asianet News

அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கட்ராமன், சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் பல்லவி, வேளச்சேரி தொகுதியில் தவெக வேட்பாளர் குமார், மதுரை மத்தி தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா, அறந்தாங்கி தொகுதியில் தவெக வேட்பாளர் பர்வேஸ், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தவெக வேட்பாளர் மதன் ராஜா, ராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் தாமு, தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழக வெற்றி கழகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
மோடி - விஜய் சந்திப்பு: சென்னை மெட்ரோ திறப்பு விழாவில் அரங்கேறிய அரசியல்
Recommended image2
Now Playing
ஜெய்கோபால் கரோடியா பள்ளி பொன்விழா விழா: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை!
Recommended image3
Now Playing
சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி: 550 நாட்டியக் கலைஞர்களின் பக்திமயமான வரவேற்பு நடனம்!
Related Stories
Recommended image1
TVK AIADMK Alliance: தமிழக அரசியலில் 50 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? 118-ஐ நெருங்கும் விஜய்! அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமையுமா?
Recommended image2
மு.க.ஸ்டாலினை கதறவிடும் தவெக வேட்பாளர்.. யார் இந்த வி.எஸ்.பாபு? அதிர வைக்கும் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved