Vijay TVK Maanadu: மாநாட்டில் ரஜினியை கூட விட்டுவைக்காத விஜய்! தளபதி கொடுத்த உள்குத்து யார்; யாருக்கு?
TVK Maanadu: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லாரையும் நோக்கி வரும் முதல் கேள்வி நீங்கள் யாரை எதிர்க்க அரசியல் செய்யப் போகிறார் என்பதுதான். இந்த கேள்விக்கு விஜய் மட்டும் விதிவிலக்கு அல்ல. தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் அரசியல் மாநாட்டின் உரையில் யாரையெல்லாம் விமர்சித்தார் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அரசியல் கட்சி தலைவர்களை தாண்டி சிலரையும் விஜய் விமர்சித்துள்ளார் என்பதே அவரது உரையின் வெளிப்பாடாக உள்ளது. பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்று கூறிய விஜய் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை என்கிறார். பெரியாரைப் பின்பற்றும் திராவிட கழகம் பகுத்தறிவையும், கடவுள் மறுப்பையும் கையில் எடுக்கும் நிலையில் அரசியல் ஆரம்பித்து பெரியார் திடலில் மரியாதை செலுத்திய விஜய் திடம் அரசியலை ஏற்கவில்லை என்பதை பார்க்க முடிகிறது.
இதையும் படிங்க: சாதனை படைச்சவங்க நாங்க! 2 லட்சம் எங்க, 25 லட்சம் எங்க! விஜய்யை வாண்டடாக வம்பு இழுக்கும் பிரேமலதா?
நடிச்சோமோ நாளு காசு பார்த்தோமா இருக்கதா நினைச்சேன். நம்ம மட்டும் நல்லா இருக்கணும் நினைப்பது சுயநலம். நம்மல வாழ வைத்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன பண்ண போறோம். மக்களுக்கு நாம என்ன செய்யப் போறோம் என்ற கேள்வி இருந்துச்சு. அதனால தான் அரசியலுக்கு வந்தேன். அதுவும் கெரியர்ல உச்சத்தில் இருக்கும்போது அப்படி சொன்னது முழுக்க முழுக்க ரஜினியை தாக்கி பேசியதாக விமர்சனங்கள் எழுகிறது.
அரசியலுக்கு வரும்போது கோவமா கொந்தளிச்சு புரட்சிகரமாக பேசி ஆ..ஊனு சத்தம் போடக்கூடாது நேரடியாகவே நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் விமர்சனம் செய்துள்ளார் என்றே கூறப்படுகிறது. மணி கணக்கில் புள்ளி விவரம் பேசமாட்டேன் வரலாறு பேசமாட்டேன் என சொல்வதிலிருந்து திராவிட கட்சியாக அறிவித்து வரலாற்றை புள்ளி விவரத்துடன் காட்டமாக பேசும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எதிர்க்கிறார் என்பது வெளிப்படையாக தெரிவதாக கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: TVK Maanadu: அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய தவெகவினர்! முக்கிய நிர்வாகி பலி! அதிர்ச்சியில் விஜய்!
மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்யணும் கவர்ச்சி கரணமான திட்டங்கள் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றக்கூடாது என திராவிட கட்சிகளான அதிமுக திமுகவின் திட்டங்களை விமர்சித்த விஜய். மீன் பிடிக்க சொல்லிக் கொடுக்கணும் என்று சொல்லி அரசியல் செய்வார்கள் என போகிற போக்கில் ராமதாஸ் பேசியதை குறிப்பிட்டு பாமகவையும், மாற்று அரசியல் என்று பேசும் எக்ஸ்ட்ரா லக்கேஸ் என கமல் உள்ளிட்ட மாற்று அரசியலை முன்வைத்து களம் கண்டவர்களையும் விமர்சித்ததாகவே பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: TN Heavy Rain: நெருங்கும் தீபாவளி! மிரட்டப்போகுகிறதா கனமழை? வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றால் பெயிண்ட் டப்பாவை எடுத்து வந்து எனக்கு சாயம் பூசுவார்கள் என்றும் பிளவுவாத அரசியல் செய்ததால் தமிழ்நாட்டில் காலூன்ற முடிய வில்லை என்றும் பாஜகவை கொள்கை எதிரி என விமர்சித்தார் விஜய். ஊழல் வாத திமுக திராவிட மாடல் என்று சொல்லி மக்களையும் குடும்பமாக ஏமாற்றுகிறார்கள் என்று திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என விமர்சித்தார் விஜய். ஆனால் இதில் மிகப்பெரிய விமர்சனம் என்னவென்றால் பாஜகவும், திமுகவும் அண்டர் டீலிங்கில் உள்ளது என இருவரும் இணக்கமாக இருப்பதாக வைத்த விமர்சனம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
விஜய் யார் பெயரையும் குறிப்பிடவில்லையே தவிர, யாரையெல்லாம் எதிர்க்கிறேன் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியிருப்பது ஒரு அரசியல் ஸ்டேட்மெண்ட் எல்லாம். காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்டவர்களை விமர்சிக்காததும், விசிகவின் கூட்டணி ஆட்சி கோட்பாட்டை கூறியதன் மூலம் அவர்களுக்கு மறைமுகமாக கூட்டணி அழைப்பை விடுத்துள்ளார் என்றே புரிந்து கொள்ள வேண்டும் என்பது விஜய் பேச்சிலிருந்து தெளிவாகிறது.