- Home
- Tamil Nadu News
- இனி சனிக்கிழமைக்கு பதில் வியாழன்..! புது தெம்புடன் பிரசாரத்தில் குதிக்கும் விஜய்! புதிய தகவல்!
இனி சனிக்கிழமைக்கு பதில் வியாழன்..! புது தெம்புடன் பிரசாரத்தில் குதிக்கும் விஜய்! புதிய தகவல்!
தவெக தலைவர் விஜய் இனி சனிக்கிழமைகளுக்கு பதில் வியாழக்கிழமைகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் சம்பவம் போல் இனி நிகழக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.

மீண்டும் வேகம் காட்டும் தவெக
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு சுமார் 30 நாட்கள் தலைமறைவாக இருந்த தவெக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் வெளியே வந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் கட்சி பணிகளில் வேகம் காட்டி வருகிறார். தவெக பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய விஜய், தனது தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரசாரத்தை தொடங்கும் விஜய்
இதேபோல் பழையபடி மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும் விளாசித் தள்ளி வருகிறார். இதனால் விஜய் பழையபடி மக்களை எப்போது சந்திக்க போகிறார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. இந்த நிலையில், விஜய் கூடிய விரைவில் மீண்டும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விஜய் அடுத்த மாத தொடக்கத்தில் தனது பிரசாரத்தை சேலத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும் இதற்காக தவெகவினர் காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இனி சனிக்கிழமைக்கு பதில் வியாழன்
கரூர் சம்பவத்தை போல் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள விஜய், மக்களை சந்திப்பை திட்டமிட்டு மிகவும் கவனமுடன் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். இதனால் அவர் இனிமேல் சனிக்கிழைமைகளுக்கு பதிலாக வியாழக்கிழமைகளில் பிரசாரம் செய்ய திட்டுமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் கவனமுடன் இருக்கும் விஜய்
சனிக்கிழைமை பெரும்பாலும் விடுமுறை நாள் என்பதால் விஜய்யை காண அதிகளவில் மக்கள் திரண்டு வந்து அசம்பாவிதம் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் விஜய் இனிமேல் வியாழக்கிழமைகளில் பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது.
விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாததன் விளைவாகத் தான் கரூரில் 41 உயிர்கள் பறிபோனது.
ஆகையால் மிக கவனமுடன் உள்ள விஜய், தான் பிரசாரம் செல்லும் இடங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

