- Home
- Tamil Nadu News
- அதிமுக -பிஜேபி -தவெக இணைந்தால் 99% வெற்றி..! கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கிய விஜய்.. பரபரப்பு செய்தி
அதிமுக -பிஜேபி -தவெக இணைந்தால் 99% வெற்றி..! கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கிய விஜய்.. பரபரப்பு செய்தி
பாஜக உடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து வந்த விஜய், பீகார் தேர்தல் முடிவுக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் மாறும் கூட்டணி கணக்கு..?
40 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும்தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கட்சி தொடங்கியது முதல் பாரபட்சமின்றி பாஜக, திமுகவுக்கு எதிராக அதிரடியான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஆனால் கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் தனது நிலைப்பாட்டில் சற்று மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்ட அவர், மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டார். அதே சமயத்தில் திமுக மீதான விமர்சனத்தில் சமரசமே கிடையாது என்ற தொணியில் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
நிலைப்பாட்டை மாற்றிய விஜய்
மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்று சொல்லிவந்த கருத்தையும் விஜய் தற்போது குறைத்துள்ளார். குறிப்பாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று சொன்ன மகாகன்பந்தன் கூட்டணி மிகவும் சொற்ப தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மிகப்பெரிய தோல்வியை தழுவியது. மேலும் புதிய கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என சொன்னார்.
மாற்றத்தை ஏற்படுத்திய பீகார் தேர்தல்
ஆனால் தேர்தல் முடிவில் அந்த கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. ஜான் சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் தான் தவெகவுக்கும் ஆலோனைகளை வழங்கி வந்தார். இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் விஜய்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இருப்பை தக்கவைக்கலாம்..
பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, விஜய் தனித்து போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை வாங்கலாம், ஆனால் அது வெற்றி பெற போதுமானதாக இருக்காது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெற்ற பின்னர் விஜய் எதிர்க்கட்சியாகக் கூட மாறி தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். இதே பாணியில் தான் விஜயகாந்தும் வெற்றி பெற்றார் என்று தெரிவித்திருந்தார்.
NDA கூட்டணியில் விஜய்..
இந்நிலையில் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றி அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து விஜய் போட்டியிடும் பட்சத்தில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத வகையில் முடிவுகள் அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இவை அனைத்தையும் மனதில் வைத்தே விஜய் பாஜக, அதிமுக கூட்டணிக்கு பச்சை கொடி காட்டியதாக சொல்கின்றனர்.

