MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நடுங்க வைக்கும் குளிர்! வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம்! போக்குவரத்து சேவை பாதிப்பு! பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

நடுங்க வைக்கும் குளிர்! வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம்! போக்குவரத்து சேவை பாதிப்பு! பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

Tamilnadu Heavy Snow: தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலவும் அடர்த்தியான மூடுபனியால் விமானம், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 09 2026, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாட்டி வதைக்கும் குளிர்
Image Credit : Getty

வாட்டி வதைக்கும் குளிர்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு பகலில் வெயில் வாட்டி வதைப்பதும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் பனிபொழிவும் நிலவி வந்தது. ஒரு சில இடங்களில் உறைபனி நிலவியது. இருப்பினும் இலங்கையின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குளிர்கால மழை மேகங்கள் காரணமாக இலங்கையில் மழை பெய்து வருகிறது. மேலும், வடக்கு திசையில் இருந்து குளிர் காற்று வங்கக் கடல் வழியாக தரைப்பகுதிக்குள் நுழைகிறது. இதன் காரணமாக இயல்பைவிட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
விமான சேவைகள் பாதிப்பு
Image Credit : Getty

விமான சேவைகள் பாதிப்பு

குறிப்பாக நேற்று முன்தினம் முதல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் எப்போதும் இல்லாத வகையில் அதிகாலை வேளையில் அடர்த்தியான மூடுபனி நிலவுகிறது. எதிரே வரும் நபர்கள் யார் என்று தெரியாத அளவுக்கு அடர்ந்த மூடுபனி காணப்பட்டது. இதனால் விமானம் மற்றும் ரயில்கள் போக்குவரத்து இரண்டாது நாளாக பாதிக்கப்பட்டது. சென்னைக்கு வரும் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பின. சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

Related Articles

Related image1
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Related image2
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி.. வெங்காயம்! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
35
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி
Image Credit : Getty

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் காலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றது. ஆகையால் பல்வேறு சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மூடுபனியால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் அடர்ந்த மூடுபனி இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

45
சென்னை வானிலை மையம்
Image Credit : ANI

சென்னை வானிலை மையம்

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

55
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : X

சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் நாளை முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை
ரயில்
வானூர்திப் பயணங்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!
Recommended image2
Chennai Powercut Update : சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (மே 26) 5 மணி நேரம் மின்தடை
Recommended image3
Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Related Stories
Recommended image1
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Recommended image2
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி.. வெங்காயம்! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved