- Home
- Tamil Nadu News
- கூட்டணி தோற்கும் என்றால் ஸ்டாலினுக்கு ஏன் கவலை? உங்க பேச்சிலேயே பதற்றம் தெரியுது முதல்வரே! வானதி சீனிவாசன்!
கூட்டணி தோற்கும் என்றால் ஸ்டாலினுக்கு ஏன் கவலை? உங்க பேச்சிலேயே பதற்றம் தெரியுது முதல்வரே! வானதி சீனிவாசன்!
முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என்று கூறியதற்கு பாஜக வானதி சீனிவாசன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

CM Stalin
Vanathi Srinivasan Vs MK Stalin: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் 2026-ல் திராவிட மாடல் ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது என கூறியிரந்தார். இதற்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அமித்ஷா அல்ல! எந்த ஷா வந்தாலும் சரி! நான் இருக்கும் வரை அது நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சரவெடி!
Vanathi Srinivasan
கட்சிகளை உடைக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது
இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம். மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால் கட்சிகளை உடைக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா? எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது. டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. அப்படியொரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள் எங்க தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான் என தன்னிலை மறந்து பேசியிருக்கிறார்.
AIADMK - BJP alliance
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறாது
அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை என்பதை, பொன்னேரியில் அவரது பேச்சு உறுதிப்படுத்துகிறது. அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால், அதுபற்றி ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும். காங்கிரஸின் கூட்டணிக்காக பிரணாப் முகர்ஜியிடமும், குலாம்நபி ஆசாத்திடமும் கைகட்டி நின்றவர்கள் யார்? 2011ல் அண்ணா அறிவாலயத்தின் மாடியில் அன்றைய காங்கிரஸ் அரசு நடத்திய ரெய்டுக்கு அஞ்சி நடுங்கி, காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை வாரி வழங்கியவர்கள் யார். இந்திரா காந்திக்கு அஞ்சி நடுங்கி கச்சத்தீவை தாரைவார்க்க உதவியது யார்? என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது அதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.
இதையும் படிங்க: என்னோட அனுமதி இல்லாமல் யாரும் தேவையில்லாமல் பேசாதீங்க! இபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! என்ன காரணம்?
Vanathi Srinivasan Vs CM Stalin
மத்திய அரசோடு, மாநில அரசோடு மோதுவது நல்லதல்ல
இந்தியா என்பது ஒரே நாடு இந்தியா என்ற நாடு உருவான பிறகே, நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்போதும் பிரிக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியோடு, அரசியல் ரீதியாக மாநிலத்தை ஆளும் கட்சி முரண்படலாம். ஆனால், மத்திய அரசோடு, மாநில அரசோடு மோதுவது ஆரோக்கியமானது அல்ல. மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து சென்ற பிறகு, அவரைப் பற்றியே முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன் அவர், இந்தியாவின் உள்துறை அமைச்சர். தமிழ்நாட்டையும் சேர்த்துதான் அவர் ஆண்டு கொண்டிருக்கிறார்.
CM Stalin Vs BJP
ஸ்டாலின் வாய் சவடால்
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எப்போதும் அப்படித்தான் இருக்கும் ஸ்டாலின் வாய் சவடால் விடலாம். அதனால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்கலாம் என யார் நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்களும் விட மாட்டார்கள். மத்திய அரசும் விடாது என்று கூறியுள்ளார்.