- Home
- Tamil Nadu News
- வழுக்கி விழுந்த வைகோ! காயங்களுடன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
வழுக்கி விழுந்த வைகோ! காயங்களுடன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
Vaiko admitted to Apollo Hospital: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்து கை விரலில் காயமடைந்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Vaiko admitted to Apollo Hospital:மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ (80). தமிழக அரசியல் தலைவர்களின் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர். சிறப்பான பேச்சாளர். மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், தமிழக பிரச்சனை எதுவாக இருந்தாலும் முதல் குரல் கொடுக்கக்கூடியவர். 80 வயதானாலும் தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். தற்போது மாநிலங்களை எம்.பி.யாக இருந்து வருகிறார். வைகோ தலைமையிலான மதிமுக கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது.
தவறி கீழே விழுந்த வைகோ
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த வைகோ நேற்று வீட்டில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வருவதாக தகவல் வௌியாகியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
எனினும், இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை தரப்பிலோ, மதிமுக தரப்பிலோ அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் அவரது உடல்நிலை எப்படி இருக்கு என்பது தொடர்பாக விரைவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொண்டர்கள் அதிர்ச்சி
வழுக்கி விழுந்து வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இதே மே மாதத்தில் கால் இடறி விழுந்ததில் இடதுதோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.